முந்தய பக்கம்

3992 பேருக்கு புதிய குடும்ப அட்டைககளை அமைச்சர் வழங்கினார்

24 Jul 2026, 10:00 pm
3992 பேருக்கு புதிய குடும்ப அட்டைககளை அமைச்சர் வழங்கினார்
<p><strong>3992 பேருக்கு புதிய குடும்ப அட்டைககளை அமைச்சர் வழங்கினார்</strong></p><p>இராஜபாளையம், ஜூலை.24- விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யத்தில் 3,992 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி யினை சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக, 727 முழு நேர நியாய விலைக் கடைகள், 235 பகுதி நேர நியாய விலைக்கடைகள் என மொத்தம் 962 ரேசன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகள் மூலம் 5,51,793 அரிசி குடும்ப அட்டை தரார்கள், 10,060 சர்க்கரை குடும்ப அட்டை தாரர்கள், 5,933 முதியோர் உதவித் தொகை குடும்ப அட்டைதாரர்கள், 2,518 காவலர்கள் குடும்ப அட்டைதாரர்கள் ஆக மொத்தம் 6,18,619 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொ ருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுக புத்ரா, சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், மாவட்ட வழங்கல் அலுவலர் சோமசுந்தர சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram