கடலூரில் 2 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்
5 Jun 2026, 3:12 am

கடலூரில் 2 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்

கடலூர், ஜூன் 4- கோடை விடுமுறை முடிந்து பள்ளி கள் திறக்கப்பட்டதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உப கரணங்கள் வழங்கும் பணியை அமைச்சர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார்.

முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டிருந்தன.

பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்தும், பன்னீர் தெளித்தும் வரவேற்றனர்.

பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற திட்டத்தின்படி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் மஞ்சக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சர் ராஜ்குமார் மாணவிகளுக்குப் பாடப்புத்த கங்கள், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் பேசிய அமைச்சர், மாவட்டத்தில் உள்ள 1,435 அரசுப் பள்ளி களைச் சேர்ந்த 1,50,362 மாணவர்கள், 282 அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 55,170 மாணவர்கள் என மொத்தம் 1,717 பள்ளிகளில் பயிலும் 2,05,532 மாணவ-மாணவிகளுக்குப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணை யாளர் கிஷன்குமார், கோட்டாட்சியர் சுந்தரராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.