தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போராடும் மாணவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று கூறும் ஒன்றிய பாஜக அமைச்சர்

25 Jun 2026, 9:12 pm
போராடும் மாணவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று கூறும் ஒன்றிய பாஜக அமைச்சர்

போராடும் மாணவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று கூறும் ஒன்றிய பாஜக அமைச்சர்

இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிரான போ ராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்க ளைப் பயங்கரவாதிகளின் “பி-டீம்” என்று சித்தரித்து பேசியுள்ள ஒன்றிய கல்வி அமைச் சர் தர்மேந்திர பிரதானின் அவமரியாதையான, உணர்வற்ற பேச்சுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) மத்திய செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்எப்ஐ தலைவர் ஆதர்ஷ் எம். சஜி, பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட தேர்வுகளில் தொடர்ந்து நடக்கும் முறைகேடு கள், வினாத்தாள் கசிவுகள், நிர்வாகத் தோல்விகளால் கோடிக்கணக்கான மாண வர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆனால் இந்த நெருக்கடியான நேரத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயங்கரவாதிகளின் போராட்டம் என்று கூறியுள்ளார்.

20 மாணவர்கள் பலி

அமைச்சரின் இத்தகைய கருத்துக்கள் மூலம் அவருக்குப் பொறுப்புணர்வும், இரக்க மும் துளியளவு கூட இல்லை என்பதையே காட்டுகின்றன. நீட் வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமையின் தோல்விகள் காரண மாக குறுகிய காலத்தில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். தேர்வு முறை முற்றிலுமாக சீர்குலைந்து போனதற்குப் பொறுப்பேற்று, மாணவர்களின் கவலைக ளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, நீதி கேட்டுப் போராடுபவர்களை அமைச்சர் தனிப் பட்ட முறையில் தாக்கிப் பேசி வருகிறார்.

மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது பயங்கரவாதம் அல்ல; அது ஒரு ஜனநாயக உரிமை ஆகும். சமீபத்திய ஆண்டுகளில் 90-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவுகள் பதிவாகியுள்ளன. இதனால் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கடுமையான மன உளைச்சலுக்கும், உணர்வுப்பூர்வமான மற்றும் நிதி ரீதியான பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளனர். இதற்கு மாணவர்களைக் குறை கூறுவதை விடுத்து, தர்மேந்திர பிரதா னும் அவரது கல்வி அமைச்சகமும் தங்களது தோல்விகளுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

போரட்டம் தொடரும்

ஒன்றிய அரசின் நிர்வாக ரீதியான அலட்சி யத்தால் தங்களது உயிரை இழந்த மாணவர்க ளின் குடும்பங்களுடனும், ஒட்டுமொத்த மாண வர் சமூகத்துடனும் எஸ்எப்ஐ உறுதியாகத் துணை நிற்கிறது. இந்தத் தேர்வு முறைகேட்டு க்கு உரியப் பொறுப்பு ஏற்கப்படும் வரை யிலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவ ருக்கும் நீதி கிடைக்கும் வரையிலும், இந்த நெருக்கடிக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரையிலும் எங்களது (எஸ்எப்ஐ) போராட்டம் தொடரும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.