தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனாதன நீதிபதிக்கு சங்கி அமைச்சர் வக்காலத்து நாடாளுமன்ற விதிகளை மீறி எல்.முருகன் அதிகார அத்துமீறல்!

6 Dec 2025, 1:30 pm
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனாதன நீதிபதிக்கு சங்கி அமைச்சர் வக்காலத்து நாடாளுமன்ற விதிகளை மீறி எல்.முருகன் அதிகார அத்துமீறல்!
<p><strong>திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சனாதன நீதிபதிக்கு சங்கி அமைச்சர் வக்காலத்து&nbsp;&nbsp;நாடாளுமன்ற விதிகளை மீறி எல்.முருகன் அதிகார அத்துமீறல்!</strong></p> <p>புதுதில்லி, டிச.6- மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பப்படும் பிரச்சனைகளுக்கு, அரசு &nbsp;சார்பில் அமைச்சர்கள் குறுக்கீடு செய் &nbsp;யும் நடைமுறை இல்லாத நிலையில், &nbsp;ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் &nbsp;விதிகளை மீறியதுடன், தேர்ந்தெடுக்கப் &nbsp;பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநரை &nbsp;தூண்டி விடும் வகையில் பேசியதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண் &nbsp;டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் கண்டனம் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கூறியிருப்பதாவது: கடந்த டிசம்பர் 5 அன்று, திருப்ப ரங்குன்றம் விவகாரம் தொடர்பாகத் தமி ழகத்தில் உருவாக்கப்பட்ட பதற்றமான &nbsp;சூழலை உடனடியாக விவாதிக்கக் கோரி, திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நாடா ளுமன்ற உறுப்பினரான ஆர். சச்சி தானந்தம் எனும் நானும், இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பி னர் கே.சுப்பராயன், மதிமுக நாடாளு மன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகி யோர் ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கான நோட்டீசை வழங்கினோம். &nbsp;எனினும், இந்தக் கோரிக்கையை மக்களவைச் சபாநாயகர் விவா தத்திற்கு ஏற்க மறுத்தார். இதனை யடுத்து, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பிற மாநிலங்க ளைச் சேர்ந்த &lsquo;இந்தியா&rsquo; கூட்டணி &nbsp;உறுப்பினர்களும் இணைந்து நாடா ளுமன்றத்திற்குள் முழக்கம் எழுப்பி யதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதியின் தவறான தீர்ப்பு: டி.ஆர்.பாலுவின் கண்டனம் சபை மீண்டும் தொடங்கிய பூஜ்ஜிய நேரத்தில், திமுக-வின் மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, இந்தப் பிரச்சனையை எழுப்பினார். முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமலும், நடைமுறையில் உள்ள &nbsp;கார்த்திகை தீப மரபுகளையும் அறி யாமலும், சென்னை உயர் நீதிமன்றத் &nbsp;தின் மதுரைக் கிளை நீதிபதி அளித்த தவ றான தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகி யுள்ளது. மேலும், நீதிமன்றத்தின் காவ லுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையை (CISF) நீதிபதி, தனது தீர்ப்பை அமலாக்குவதற்கு அனுப்பி வைக்கிறார். இது மாநிலக் காவல்துறையோடு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மோத விடுவ தற்கு முயற்சி எடுப்பதாகும். இது போன்ற &nbsp;மத நல்லிணக்கத்திற்கு விரோதமாகச் செயல்படும் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் நாடாளு மன்றத்தில் பேசினார். ஒன்றிய அமைச்சரின் &nbsp;அதிகார அத்துமீறல் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பப்படும் பிரச்சனைகளுக்கு, அரசு சார்பில் அமைச்சர்கள் குறுக்கீடு செய்யும் நடை முறை இல்லாத போதும், ஒன்றிய தக வல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் &nbsp;மாநிலங்களவையின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் &nbsp;எல். முருகன் திடீரென்று மக்களவை யில் தோன்றி இந்தப் பிரச்சனைக்கு பதி லளித்து பேசினார். அவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுகளுக்கு எதிராக, தமிழக அரசும் மாநிலக் காவல் &nbsp;துறையும் திருப்பரங்குன்றம் கோவி லில் வழிபடுபவர்களைத் தடுத்து நிறுத்தி யுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், வழி பாட்டு உரிமை என்பது பழங்காலத்திலி ருந்தே மக்களிடம் இருந்து வரும் ஒன்று &nbsp;என்றும், ஒரு குறிப்பிட்ட மதச் சமூ கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசு இந்துக்கள் நுழைவ தைத் தடுத்து, அவர்களின் வழிபாட்டு உரிமைகளைப் பறித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மாநில அரசுக்கு எதிராக ஆளுநரை தூண்டிவிடுவதா? திருப்பரங்குன்றம் சென்ற பாஜக &nbsp;மாநிலத் தலைவர், இந்து முன்னணி யின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா &nbsp;சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் குறிப் பிட்டார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழிபடும் உரிமையை வழங்குகிறது, அது ஒரு அடிப்படை உரி மையும் கூட என்று பேசிய அமைச்சர், &nbsp;சட்டத்தின்படி, தமிழ்நாடு மாநில ஆளு நர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்த ரவுகளை நிலைநிறுத்தி செயல்படுத்த வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் இருந்தே ஆளுநருக்கு உத்தரவிட்டார். உண்மைகளை மறைத்து நாடாளுமன்றத்தில் பேச்சு திருப்பரங்குன்றத்தில் காலங்கால மாக உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு மேல்தான் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் உள்ளது. சிக்கந்தர் தர்ஹா வுக்கு எதிரில் உள்ள நில அளவைக் கல்லில் எந்த காலத்திலும் தீபம் ஏற்றி யது கிடையாது. இதைப் பற்றிய உண்மை நிலையை அறியாமல் தீர்ப்ப ளித்த நீதிபதியைப் பற்றி எதுவும் சொல்லாமல், ஒன்றிய அமைச்சர் உண் &nbsp;மைக்கு மாறாகப் பேசினார். இரு சமூக மக்களிடையே மோதல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தமி ழக அரசால் 144 தடை உத்தரவு பிறப் &nbsp;பிக்கப்பட்டது. இதனை மீறுவதற்கு முயன்றதாலேயே, பக்தர்கள் என்ற &nbsp;போர்வையில் வந்த பாஜக-வின் மாநி லத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணியின் மாநிலத் தலை வர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் &nbsp;சங்- பரிவார அமைப்பைச் சார்ந்த வர்கள் காவல்துறையால் கைது செய் &nbsp;யப்பட்டனர். உள்ளூர் பக்தர்கள் யாரும் &nbsp;அங்கு வரவில்லை. பாஜக-வால் திரட்டி &nbsp;வரப்பட்ட சங்-பரிவார அமைப்பினரே திருப்பரங்குன்றத்தில் ஒரு அமைதி யற்ற சூழலை உருவாக்க முயற்சிக் கின்றனர். இந்த உண்மையை, ஒன்றிய &nbsp;இணையமைச்சர் முருகன் மறைத்தார். எல்.முருகனின் &nbsp;அரசியல் - சட்ட அத்துமீறல் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 29 (சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாத்தல்) மற்றும் பிரிவு 25 (வழி பாட்டு உரிமை) ஆகியவற்றின் படி, தர்ஹாவின் வழிபடும் உரிமையைத் தடுப்பதாக நீதிபதியின் தீர்ப்பு உள்ள தையும் ஒன்றிய அமைச்சர் லாவகமாக &nbsp;மறைத்துக் கொண்டார். உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு நிலுவையில் &nbsp;இருக்கும்போது, ஒன்றிய அமைச்சர் எல். &nbsp;முருகன், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை மீறி, நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் &nbsp;அமல்படுத்த வேண்டும் என்று நாடாளு மன்றத்தில் பேசுவது சட்ட மற்றும் அரசி யல் அத்துமீறலாகும். நல்லிணக்கமே வெல்லும்! மத்திய தொழில் பாதுகாப்புப் படை யை மாநிலக் காவல்துறையோடு மோத விடுகிறார் ஒரு நீதிபதி, அந்த நீதிபதி யின் தீர்ப்பை அமலாக்க வேண்டும் &nbsp;என்று ஆளுநருக்கு உத்தரவிடுகிறார் ஒரு ஒன்றிய அமைச்சர் &ndash; இவர்க ளுக்கு இடையில், அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முயலும் &nbsp;தமிழக அரசு பாராட்டுக்குரியது. மதச்சார்பின்மைக்கு எதிராகச் செயல்படும் சக்திகளை தொடர்ந்து &nbsp;அம்பலப்படுத்துவோம். மதவெறி யர்களுக்குப் பாடம் புகட்டுகிற வகை யில் ஜனநாயக சக்திகளும் மக்களும் அணிதிரள வேண்டும். இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்பி. &nbsp;கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.