தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஏபி கடைமடை பகுதிக்கு சமச்சீர் பாசனம் அதிகாரிகள் மழுப்பல் பதில், அமைச்சர் கண்டிப்பு

21 Jun 2026, 2:24 am
பிஏபி கடைமடை பகுதிக்கு சமச்சீர் பாசனம் அதிகாரிகள் மழுப்பல் பதில், அமைச்சர் கண்டிப்பு

பிஏபி கடைமடை பகுதிக்கு சமச்சீர் பாசனம் அதிகாரிகள் மழுப்பல் பதில், அமைச்சர் கண்டிப்பு

திருப்பூர், ஜூன் 20 - பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தில் வெள்ளக்கோவில் கிளை கால்வாயில் நிலவும் பாசன நீர் பற்றாக் குறை குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் முன்னி லையில் திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தி யாளர்களிடம் பேசிய வெள்ளக் கோவில் கிளை கால்வாய் நீர்பாது காப்பு சங்கத்தின் தலைவர் பா.வேலு சாமி, கூறுகையில், வெள்ளக்கோவில் கிளை கால்வாயின் கீழ் சுமார் 48 ஆயி ரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. சட்டப்படி இந்த பகுதிக்கு சமச்சீர் பாசன முறைப்படி தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கடந்த 6 ஆண்டுக ளாகக் கடைமடை பகுதியான வெள் ளக்கோவிலுக்கு சரியான முறையில் தண்ணீர் வந்தடைவதில்லை. இதற் காக பல போராட்டங்களை நடத்தியுள் ளோம். என்று தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் மழுப்பினார்கள். விவ சாயிகளின் புகார்களை கேட்டறிந்த அமைச்சர் அருண்ராஜ், அதிகாரிகளின் மழுப்பலான பதில்களை ஏற்க மறுத்து, சட்டப்படியான சமச்சீர் பாச னத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை பிறப்பித் தார். மேலும், பாசன நீர் விநியோ கத்தை அதிகாரிகள் முறையாக கண் காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத் தினார். கடந்த ஆட்சியில், வாய்க்கால் களை சீரமைக்க ரூ.4,500 கோடியில் தயாரிக்கப்பட்ட திட்டத்தையும், பல்ல டம் பகுதியில் கொண்டு வரப்பட்ட நீர் உந்தும் திட்டத்தையும் இந்த அரசு முற்றி லும் நிராகரித்துள்ளதாகவும், அதற்குப் பதிலாக, நவீன தொழில்நுட்ப வசதிக ளுடன் கூடிய குழாய் வழித் திட்டத்தை புதிய முன்மொழிவாக தயாரித்து அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஸ்காடா மற்றும் சென்சார்கள் போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்ப டுத்தி, நிகழ்நேர கண்காணிப்பு முறை யில் தண்ணீர் வீணாகாமல் தடுக்கலாம். ஒன்றிய அரசின் ‘ஒரு துளி நீரில் அதிக பயிர்’ என்ற இலக்கை எட்ட முடியும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித் தார். மேலும் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் முன்னிலையில் அனைத்து வாய்க்கால்களும் கண் காணிக்கப்படும் என உறுதியளித்தார். இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக வெள்ளகோவில் கிளை கால்வாய் விவசாயிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.