தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவர் என்ற அடையாளமே பெருமை! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு

11 Jun 2026, 11:39 pm
மருத்துவர் என்ற அடையாளமே  பெருமை! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு
<p><strong>மருத்துவர் என்ற அடையாளமே பெருமை! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அருண்ராஜ் பேச்சு</strong></p><p>விழுப்புரம், ஜூன் 11- விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற 11-வது பட்டமளிப்பு விழாவில், மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற 90 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் பட்டங்களை வழங்கி கௌரவித்தார். மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், &quot;நான் அமைச்சரா அல்லது மருத்துவர் என என்னைக் கேட்டால், அரசியல் அதிகாரம் அனைத்துத் துறைகளையும் மாற்றும் சக்தி கொண்டதாக இருந்தாலும், நான் முதலில் ஒரு மருத்துவர் என்ற அடையாளத்தையே பெருமையாகக் கருதுவேன். எனது மருத்துவப் படிப்பு கால நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளன&quot; என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், &quot;மருத்துவ மாணவர்கள் தாங்கள் அடையும் உயர்ந்த பதவிகளை விட, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்குச் செய்யும் சேவையே மேலானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். சேவை மனப்பான்மையே ஒரு மருத்துவருக்கு அழகு&quot; என்று அறிவுறுத்தினார். விழாவில் கல்லூரி முதல்வர் மரு.மை.லூசி நிர்மல் மெடோனா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.ஸ்ரீ ரஷத், மருத்துவ நிலைய அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கல்லூரிக்குத் தேவையான கூடுதல் மின்மாற்றி வசதி, 1270 படுக்கை வசதிகளுக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.