அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
30 May 2026, 11:51 pm

அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

நாமக்கல், மே 30- நாமக்கல்லில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் வெள்ளி யன்று ஆய்வு செய்தார். அப்போது, பழைய மருத்துவ மனை வளாகத்தில் மீண்டும் மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட அமைச் சர், தற்போது செயல்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார மற் றும் நலவாழ்வு மையம் மற்றும் அரசு மாதிரி பள்ளி கட்டு மானப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்ட பிறகு பழைய மருத்துவமனையின் அனைத்து சேவை களும் அங்கு மாற்றப்பட்டதால், நகர மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பழைய மருத்துவமனை வளா கத்தில் குறைந்தபட்சம் புறநோயாளர் சேவைகள் மீண் டும் தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. மேலும், நகர்ப்புற சுகாதார மற்றும் நலவாழ்வு மையத்தை பழைய அரசு மருத்துவமனை வளாகத்திற்கு மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ஒரு மாதத்திற்குள் இதுகுறித்து நட வடிக்கை மேற்கொள்ளப்படும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.