ஒன்றிய அரசின் நீட் கொள்கை கூட்டாட்சிக்கு எதிரானது! அமைச்சர்
18 May 2026, 9:07 pm

ஒன்றிய அரசின் நீட் கொள்கை கூட்டாட்சிக்கு எதிரானது! அமைச்சர்

அருண்ராஜ் கண்டனம்

நாமக்கல், மே 18 - நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ், ‘நீட்’ தேர்வு மற்றும் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ போன்ற பாஜக கொள்கைகள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானவை என்று கண்டித்தார். வடமாநிலங்களில் நீட் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகளும், தேசியத் தேர்வு முகமையின் முறைகேடுகளும் இத்தேர்வின் நம்பகத்தன்மையை சிதைத்து மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறியிருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நீட் தேர்வு வேண்டாம் என்ற தவெக-வின் உறுதியான நிலைப்பாட்டை சட்டப்பேரவையில் தீர்மானமாகக் கொண்டு வந்து, இந்தியாவிலேயே சிறந்ததாக விளங்கும் தமிழக மருத்துவத் துறையை மேலும் உயர்தரமானதாக மாற்றுவோம் என்று அவர் கூறினார்.