தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு முறைகேடுகளுக்கு கடும் எச்சரிக்கை

11 Jun 2026, 12:24 am
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு  முறைகேடுகளுக்கு கடும் எச்சரிக்கை
<p><strong>செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு முறைகேடுகளுக்கு கடும் எச்சரிக்கை</strong> </p><p>செங்கல்பட்டு,ஜூன் 10- சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புதன்கிழமை (ஜூன் 10) திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிகிச்சை பெறும் நோயாளிகளை நேரில் சந்தித்த அவர், மருத்துவர்களின் கவனிப்பு மற்றும் சிகிச்சையின் தரம் குறித்துக் கேட்டறிந்தார். மருத்துவமனை கழிப்பறைகளைப் பார்வையிட்டபோது, அங்கு குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், ஒப்பந்ததாரரை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தார். முறையான கட்டணம் வழங்கப்பட்டும் பணியைச் சரியாகச் செய்யாத ஒப்பந்ததாரரை, இனி இதுபோன்ற நிலை தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து, அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த அவர், காய்கறிகளின் தரம் மற்றும் சமையலறைச் சுத்தத்தைப் பரிசோதித்தார். நுழைவாயிலில் தேங்கியிருந்த கழிவுநீரை உடனடியாகச் சரிசெய்ய மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மருத்துவ மனையில் உள்ள காலி இடங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட முதல்வர் ஆலோசனையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மருத்துவமனையில் லஞ்சம் வாங்கு வதாக வரும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தற்போது சடலங்களை எடுத்துச் செல்லத் தனி வாகனங்கள் இல்லாததால், நோயா ளிகளுக்கான பேட்டரி வாகனங்களே பயன்படுத்தப் படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், விரைவில் கூடுதல் பேட்டரி வாகன வசதிகள் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்நிழ்வில் எம்.எல்.ஏ. தியாகராஜன் மற்றும் மருத்துவ மனை அதிகாரிகள் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.