தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்குச் சேகரிப்பு

7 Apr 2026, 5:38 pm
இருசக்கர வாகனத்தில் சென்று  அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்குச் சேகரிப்பு
<p><strong>இருசக்கர வாகனத்தில் சென்று &nbsp;அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்குச் சேகரிப்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 7- &nbsp;திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செவ்வாய் அன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களம் காணும் அவர், திருவெறும்பூர், பகவதிபுரம், பிரகாஷ் நகர், மலைக்கோவில், மாதா கோவில் தெரு, கூத்தைப் பார் பேரூருக்கு உட்பட்ட திடீர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார். &nbsp;இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். அரசுப் பேருந்துகளில் ஏறிப் பயணிகளிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார். &nbsp;இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார் &nbsp;மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணியினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். &nbsp;பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், &ldquo;திருவெறும்பூர் தொகுதியில் கடந்த காலங்களில் ரூ.450 கோடிக்கும் மேல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே திமுகவிற்கு அமோக வரவேற்பு உள்ளது. அரியமங்கலம் குப்பை கிடங்கை 2027-க்குள் முழுமையாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. குப்பைகள் அகற்றப்பட்ட பின் அவ்விடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது&rsquo;&rsquo; என்று குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.