முந்தய பக்கம்

காட்டூர் பிலோமினாள் ஆலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஈஸ்டர் வாழ்த்து கூறி வாக்குச் சேகரிப்பு

5 Apr 2026, 5:18 pm
காட்டூர் பிலோமினாள் ஆலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ்  ஈஸ்டர் வாழ்த்து கூறி வாக்குச் சேகரிப்பு
<p><strong>காட்டூர் பிலோமினாள் ஆலயத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் &nbsp;ஈஸ்டர் வாழ்த்து கூறி வாக்குச் சேகரிப்பு</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, ஏப். 5- &nbsp;மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஞாயிறன்று காட்டூர் பகுதியில் அமைந்துள்ள புனித பிலோமினாள் ஆலயத்தில் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். &nbsp;அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மக்களிடம் வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, மு. மதிவாணன் (மாநகரக் கழகச் செயலாளர்), நீலமேகம் (பகுதி கழகச் செயலாளர்) மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram