திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிரவாக்குச் சேகரிப்பு
3 Apr 2026, 6:05 pm
<p><strong>திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் தீவிரவாக்குச் சேகரிப்பு</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, ஏப் 3- திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எச்.எ.பி.பி. மெயின் கேட் பகுதியில் வெள்ளி அன்று தனது பயணத்தை அவர் ஆரம்பித்தார். அங்கு பணிக்குச் சென்று கொண்டிருந்த தொழிற்சாலைத் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரித்தார். அதனைத் தொடர்ந்து, திறந்த வெளி வாகனத்தில், எச்.எ.பி.பி காலனி, போலீஸ் காலனி, நவல்பட்டு ஊராட்சி, நவல்பட்டு கிராமம் பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஸ், திருவெறும்பூர் தொகுதியில் மக்களுடன் இணைந்து பணியாற்றியதை வேட்பாளர் நினைவு கூர்ந்தார். இதுவரை செய்த பணிகளைத் தொகுத்துத் தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். வாக்குறுதி நிறைவேற்றம்: மக்களுக்கு அளித்த 10 முக்கிய வாக்குறுதிகளில், 7 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 வாக்குறுதிகளும், தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளைத் தொடரப்போவதாக வாக்குறுதி அளித்தார். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களையும், கட்சித் தோழர்களையும் கேட்டுக் கொண்டார்.</p>
<p> </p>
