வளர்ச்சித்திட்டம் குறித்து அமைச்சர் ஆய்வு
31 May 2026, 10:23 pm
<p><strong>வளர்ச்சித்திட்டம் குறித்து அமைச்சர் ஆய்வு</strong></p><p>கோவை, மே 31- கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் தமிழ் நாடு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதி காரிகள் மற்றும் அலுவலர்க ளுடன் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். கோவையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும் ஆலோ சனை நடத்துவதற்காகவும் தமிழ்நாடு பொதுப் பணித்துறை மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஞாயிறன்று வருகை புரிந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற் கொண்ட அவர், ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை சார்ந்து ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். இதில், ஆட்சியர் பவன்குமார், துறையின் செயலாளர் மற்றும் துறை சார்ந்த அதிகா ரிகள், மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட அமைச்சர் களான சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரும் இக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிட்டதக்கது.</p>
