முந்தய பக்கம்

காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் உத்தரவு

3 Feb 2026, 4:00 pm
காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் உத்தரவு
<p><strong>காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் உத்தரவு</strong></p> <p>சென்னை, பிப்.3 - வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் உழவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டுத் தொகைகளை உழவர்க ளுக்கு உடனடியாக வழங்கிடும் பொருட்டு ஆய்வுக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2025 குறுவை பருவத்தில் நெற்பயிர் அறுவடை பரிசோதனை விவரம், கணக்கீடு செய்யப்பட்ட சராசரி மகசூல் விவரம் தயார் செய்து, காப்பீட்டு நிறுவனங்கள் பிப்.14, 2026-க்குள் ஒப்புதல் அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிப்.15 முதல் வரவு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சமீபத்தில் வெள்ள பாதிப்பிற்குள்ளான நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு வாரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram