முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் மினி பேருந்துகள்
13 Nov 2025, 3:30 pm
<p><strong>முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் மினி பேருந்துகள்</strong></p>
<p>இராமநாதபுரம், நவ.13- இராமநாதபுரம் மாவட்டம் முது குளத்தூர் பேருந்து நிலையத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், பல மினி பேருந்துகள் அனுமதியின்றி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து பயணிகளை ஏற்றி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சில மினி பேருந்துகள் நீண்ட நேரம் நிலையத்திற்குள் நிறுத்தப்படுவ தால் அரசு பேருந்துகள் நிறுத்துவதற்கு இட மின்றி சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் எந்த பேருந்து எங்கே நிற்கிறது என்பதைக் கண்டறிய முடி யாத நிலையில் குழப்பம் நிலவுகிறது. இந்த நிலை குறித்து பொதுமக்கள், “மினி பேருந்துகள் பேருந்து நிலை யத்துக்குள் நுழையாதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இதை போலீசார் கவனிக்காதது ஏன்” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.</p>
