மினி பேருந்து விபத்து: 31 பேர் காயம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>மினி பேருந்து விபத்து: 31 பேர் காயம்</strong></p>
<p>உதகை, ஜன.7- உதகை அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில், 30க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். நீலகிரி மாவட்டம், உத கையிலிருந்து மணியட்டி நோக்கி புதனன்று காலை மினி பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. உதகையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (45) ஓட்டுநராகவும், சதீஷ் (30) நடத்துநராகவும் பேருந்தை இயக்கியுள்ளனர். இந்நிலையில், பாலடா அருகே உள்ள தங்காடு – மணலாடா பகுதியில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, உருண்டு அருகிலிருந்த காய்கறி தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 31 பேர் காயமடைந்தனர். இதில் 4 பேருக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப் பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீ சார் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.</p>
