நசிந்து வரும் கழிவுப் பஞ்சு மறுசுழற்சித் தொழில்: உற்பத்தியை குறைக்கும் மில்கள்
22 Dec 2025, 4:02 am

கழிவுப் பஞ்சு விலை உயர்வு மற்றும் உற்பத்தி நூல்களுக்கு உரிய விலை கிடைக்காததால், தமிழ்நாட்டில் உள்ள கழிவுப்பஞ்சு மறுசுழற்சி மில்கள் 50% உற்பத்தி குறைப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் ஜவுளித் தலைநக ரம் எனப்படும் கோயம்புத்தூர் மற் றும் அதனை சுற்றியுள்ள மாவட் டங்களில், கழிவுப் பஞ்சு மறுசுழற்சி மில்கள் தற்போது முன்னெப் போதும் இல்லாத ஒரு பொருளா தார நெருக்கடியை சந்தித்து வரு கின்றன. மூலப்பொருள் விலை உயர்வு, விற்பனை மந்தநிலை என இரட்டைச் சவால்களை எதிர் கொண்டுள்ள இத்தொழிலைப் பாதுகாக்க, உற்பத்தியை குறைக்கும் போராட்டத்தை மில் உரிமையாளர்கள் கையில் எடுத் துள்ளனர். தமிழகத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட கழிவுப் பஞ்சு மறுசுழற்சி மில்கள் இயங்கி வருகின்றன. இவை நூற்பாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பஞ்சை (Waste Cotton) மூலப் பொருளாக வாங்கி, அவற்றை நவீன இயந்திரங்கள் மூலம் சுத்தி கரித்து மீண்டும் நூலாக மாற்று கின்றன. நாளொன்றுக்கு சராசரி யாக 25 லட்சம் கிலோ காட்டன் நூல் மற்றும் 15 லட்சம் கிலோ வண்ண நூல்கள் (40-க்கும் மேற்பட்ட ரகங் கள்) இங்கு உற்பத்தி செய்யப்படு கின்றன. இந்த நூல்கள் கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்களுக்கு விநியோ கிக்கப்பட்டு, அங்கிருந்து மருத்து வத் துணிகள், நைட்டிகள், லுங்கி கள், துண்டுகள் மற்றும் சமையல றைத் துணிகள் என சாமானிய மக் கள் பயன்படுத்தும் அத்தியாவசி யப் பொருட்களாக மாற்றப்படுகி றது.

கடந்த சில மாதங்களாக, இந்த மில்களின் இயக்கத்தை முடக்கும் வகையில் இரண்டு முக்கியப் பிரச் சனைகள் உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கழிவுப் பஞ்சின் விலை கிலோவுக்கு 8 ரூபாய் வரை உயர்ந் துள்ளது. இது உற்பத்திச் செலவை பெருமளவு அதிகரித்துள்ளது. மறு புறம் அடக்க விலை உயர்ந்தாலும், சந்தையில் விற்கப்படும் நூல்க ளின் விலை கடுமையாக வீழ்ச்சி யடைந்துள்ளது. தேக்கமடைந் துள்ள விற்பனையால், உற்பத்தி செய்த நூல்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டா யத்திற்கு மில் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலால், கடந்த ஒரு மாதமாக மில்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தொழிலாளர்களின் ஊதியம், மின் சாரக் கட்டணம் மற்றும் வங்கி வட்டி ஆகியவற்றை செலுத்தக்கூட முடி யாத நிலைக்கு மில் உரிமையாளர் கள் தள்ளப்பட்டுள்ளனர்.

50% உற்பத்தி குறைப்பு போராட்டம்

இந்த சூழலை ஒன்றிய, மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், மறு சுழற்சி ஜவுளி கூட்டமைப்பு (Recycled Textile Federation) சார்பில் உற்பத்தி குறைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கியுள்ள இந்தப் போராட் டம், வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது. முதற்கட்டமாக கோயம் புத்தூர் மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட மில்கள் தங்களது உற்பத்தியில் 50 சதவீதத்தைக் குறைத்துள்ளன. வரும் நாட்களில் திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட் டங்களுக்கும் இந்தப் போராட்டம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படு கிறது.

கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள்

நெருக்கடியில் இருக்கும் இந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிலை (MSME) பாதுகாக்க, ஜவுளி கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறு கையில், உள்நாட்டில் கழிவுப் பஞ்சு தட்டுப்பாடின்றி கிடைக்க வேண் டும் எனில், ஒன்றிய அரசு கழிவுப் பஞ்சு ஏற்றுமதிக்கு உடனடியாக ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டுச் சந்தை யில் மூலப்பொருள் விலை குறை யும். உற்பத்தி செய்யப்படும் நூல்க ளுக்கு சந்தையில் நியாயமான மற் றும் நிலையான விலை கிடைப் பதை உறுதி செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். கடும் நஷ்டத்தில் இயங்கும் மில்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் குறிப் பிட்ட காலம் சலுகை வழங்க வேண் டும் என்றனர். இந்த உற்பத்தி குறைப்பால் தினசரி பல கோடி ரூபாய் மதிப்பி லான வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக் கும். குறிப்பாக, கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்குத் தேவையான நூல் விநியோகம் தடைபடுவதால், ஜவுளிச் சங்கிலித் தொடர் முழுவதுமே பாதிப்புக்குள் ளாகும் அபாயம் உள்ளது. “சுற்றுச்சூழலைப் பாதுகாக் கும் வகையில் கழிவுகளை மறு சுழற்சி செய்து பயனுள்ள பொரு ளாக மாற்றும் இந்தத் தொழில் நலி வடைந்தால், அது நாட்டின் பொரு ளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக் கும் பெரிய இழப்பாகும்,” என கூட் டமைப்பின் நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு உடனடியாகத் தலையிட்டு, கழிவுப் பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஜவுளித் தொழிலை பாதுகாக்கவும் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஜவுளித் துறையினரின் எதிர்பார்ப்பாக உள் ளது. (ந,நி)