முந்தய பக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.45 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

20 Dec 2025, 3:38 pm
ராணிப்பேட்டை மாவட்டத்தில்  1.45 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
<p>ராணிப்பேட்டை,டிச.20- ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா, அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்தப் பட்டியலில் மொத்தம் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் 46,484 பேர், குடிபெயர்ந்தவர்கள் 60,277 பேர், இருமுறை பதிவு செய்தவர்கள் 6,875 பேர் மற்றும் முகவரி கண்டறிய இயலாதவர்கள் 31,005 பேர் என விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. &nbsp;இந்நிகழ்வில் பி. ரகுபதி (சிபிஎம்), சங்கர் மேஸ்திரி (சிபிஐ), சோ. தமிழ் (விசிக) உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram