தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அழிவின் விளிம்பில் சிறுதானிய விவசாயம்: விளம்பரங்களும் எதார்த்தங்களும்! - கே.பி. பெருமாள்

11 May 2026, 9:13 pm
அழிவின் விளிம்பில் சிறுதானிய விவசாயம்: விளம்பரங்களும் எதார்த்தங்களும்! - கே.பி. பெருமாள்

அழிவின் விளிம்பில் சிறுதானிய விவசாயம்: விளம்பரங்களும் எதார்த்தங்களும்! - கே.பி. பெருமாள்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பனிவரகு, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களைத் தமிழர்கள் தங்கள் பிரதான உணவாகக் கொண்டி ருந்தனர் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள டெக்கான் பல்கலைக்கழகத் தொல்பொருள் தாவரவியல் ஆய்வாளர்கள், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரமான கோவையை அடுத்த மூலப்பாளையத்தில் மேற்கொண்ட ஆய்வில், வரகு, பனி வரகு, சாமை, தினை, குதிரைவாலி உள்ளிட்ட தானியங்கள் பயிரிடப்பட்டது கண்டறி யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்களின் உணவுப் பண்பாட்டில் சிறுதானியங்கள் மூவாயிரம் ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது புலனாகிறது.

சிறுதானிய உற்பத்தியும் இன்றைய நிலையும்

இந்தியாவில் கோதுமை மற்றும் அரிசிக்கு அடுத்தபடியாகச் சிறுதானியங்கள் இப்போதும் பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக ராஜஸ்தான், கர்நாடகா, மகா ராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநி லங்களில் இவை பயிரிடப்படுகின்றன. உலக அளவில் 90 நாடுகளில் சிறுதானிய உற்பத்தி நடைபெறுகிறது. ஆப்பிரிக்காவில் சுமார் 50 கோடி மக்களின் பிரதான உணவாக இவை உள்ளன. இந்தியாவில் சுமார் 2.5 கோடி சிறு விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியில் நேரடி யாக ஈடுபட்டு வருகிறார்கள்.

குறைவான முதலீடு; நிறைவான பலன்

சிறுதானியங்கள் அளவில் சிறியதாக இருந் தாலும், அவற்றைச் சாகுபடி செய்வதற்குச் செலவு மிகக் குறைவு. குறிப்பாகத் தண்ணீர்த் தேவை மிகக் குறைவானது. உதாரணமாக, ஒரு ஹெக்டேர் நெல் உற்பத்திக்கு 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், ராகிக்கு 40 ஆயிரம் ரூபாய் மட்டுமே போதுமானது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இத்தகு பயிர்கள், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் நிலவும் இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமானவை.

2023 சர்வதேசச் சிறுதானிய ஆண்டும் ‘ஸ்ரீ அன்னா’ விளம்பரமும்

கடந்த 2023-ஆம் ஆண்டைச் சர்வதேசச் சிறு தானிய ஆண்டாக ஐநா சபை அறிவித்தது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் நடைபெற்ற ‘ஸ்ரீ அன்னா’ மாநாட்டில், சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கப் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறி வித்தார். ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் சிறுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளதா அல்லது அதைப் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால் விடை ‘இல்லை’ என்பதுதான்.

புள்ளிவிவரங்களைப் பார்த்தால் உற்பத்தி குறைந்து வருவதே தெரிகிறது. தமிழ்நாட்டில் சராசரியாக 8.94 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சிறுதானியங்கள் பயிரிடப்படுகின்றன. இதில் மக்காச்சோளம் (28.27 லட்சம் டன்), சோளம் (3.62 லட்சம் டன்), கேழ்வரகு (2.27 லட்சம் டன்) ஆகியவையே பெரும் பகுதியை ஆக்கி ரமிக்கின்றன. ஆனால் உண்மைச் சிறுதானி யங்களான சாமை (0.18 லட்சம் டன்), வரகு (0.04 லட்சம் டன்), தினை (0.01 லட்சம் டன்) ஆகியவற்றின் உற்பத்தி மிகவும் சொற்ப மாகவே உள்ளது. சாமை, வரகு, தினை போன்ற குறுதானியங் களின் நிலை இந்தியா முழுவதும் இதே நிலையில் தான் உள்ளது.

அரசின் போலிப் பெருமிதமும் நிதி ஒதுக்கீடு சிக்கலும்

ஒன்றிய பாஜக அரசு சிறுதானிய உற்பத்திக் காகத் தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், அந்த நிதி குறு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குப் போய்ச் சேருவதில்லை. ‘சிறுதானியம்’ என்று பொதுவாகப் பேசி, அதில் மக்காச்சோளம் மற்றும் சோளத்தின் உற்பத்தியைக் காட்டித் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்கிறது அரசு. ஆனால், அழிவின் விளிம்பில் உள்ள சாமை, வரகு, குதிரைவாலி போன்றவற்றைப் பயிரிடும் விவசாயிகளுக்குப் போதுமான வருமானம் கிடைக்காததால், அவர்கள் இந்தப் பயிர்களை உற்பத்தி செய்ய முன்வருவதில்லை. ஒன்றிய அரசின் செயல்பாடுகள் அனைத்தும் வெறும் விளம்பரங்களாகவே இருக்கின்றனவே ஒழிய, நிலத்தில் உழைக்கும் விவசாயிகளுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை

சிறுதானிய விவசாயம் சந்திக்கும் சவால்கள்

கைவிடுவதற்குப் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன:

குறைந்தபட்ச ஆதரவு விலை: அரசு சிறுதானியங்களுக்கு முறையான குறைந்த பட்ச ஆதரவு விலையை (MSP) அறிவிப்ப தில்லை. தரமான விதைகள்: இன்றைய காலநிலைக்கு ஏற்பப் பூச்சி எதிர்ப்புத் திறன் கொண்ட தரமான விதைகளை அரசு உருவாக்குவதில்லை. இயற்கைப் பேரிடர் இழப்பீடு: வறட்சி அல்லது வெள்ளத்தினால் பயிர்கள் அழியும்போது, அவற்றுக்கான இழப்பீடு கிடைப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளன. கொள்முதல் மற்றும் இயந்திரங்கள்: சிறு தானியங்களைக் கொள்முதல் செய்ய அரசு முறையான ஏற்பாடுகளைச் செய்வதில்லை. மேலும், அறுவடை செய்வதற்கான நவீன இயந்திரங்கள் இல்லாததால் மனித உழைப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது; இது லாபத்தைக் குறைக்கிறது. சிறுதானியப் பாதுகாப்பிற்குத் தேவையான நடவடிக்கைகள் அழிவின் விளிம்பில் நிற்கும் சிறு, குறு தானியங்களைப் பாதுகாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கீழ்க்கண்ட நடவடிக்கை களை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்: • சிறுதானியங்களுக்கு முறையான குறைந்த பட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க வேண்டும். • விளைவிக்கப்பட்ட தானியங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யவேண்டும். • தரமான நவீன ரக விதைகளை அரசுப் பண்ணை கள் மூலம் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். • அறுவடை செய்வதற்கு ஏற்ற எளிய நவீன இயந்திரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். • சிறுதானிய உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். • பொது விநியோகத் திட்டத்தின் (ரேஷன்) மூலம் சிறுதானியங்களை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். • சத்துணவுத் திட்டம் மற்றும் அம்மா உணவகம் போன்ற அரசுத் திட்டங்களில் சிறுதானிய உணவுகளைக் கட்டாயமாக்க வேண்டும். • சிறுதானிய உணவு மற்றும் விதை கண்காட்சி களை அரசுத் தரப்பில் அதிக அளவில் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். • இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் சிறு தானியப் பயிர்களுக்கு உரிய இழப்பீட்டைத் தாமதமின்றி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை ஆட்சி யாளர்கள் செயல்படுத்தினால் மட்டுமே வரகு, பனிவரகு, சாமை உள்ளிட்ட சிறுதானி யங்களைப் பாதுகாக்க முடியும். நமது எதிர்காலச் சந்ததியினரின் ஆரோக்கியம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப் பட வேண்டும் எனில், சிறுதானியப் பாதுகாப்பு என்பது வெறும் விளம்பரமாக இல்லாமல் உண்மையான மக்கள் திட்டமாக மாற வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.