வறட்சி கால ஊக்கத்தொகை ஆவின் நிர்வாகத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் நன்றி
17 Mar 2026, 3:26 pm
<p><strong>வறட்சி கால ஊக்கத்தொகை ஆவின் நிர்வாகத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் நன்றி</strong></p>
<p>திருப்பத்தூர், மார்ச் 11- திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் மற்றும் வறட்சி காரணமாக பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். பசு மாட்டிற்கான தீவனங்கள் கடுமையான விலை உயர்வு காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். அதனால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அரசு அறிவித்துள்ள லிட்டருக்கு ரூபாய் 3 ஊக்கத்தொகையுடன் வறட்சிக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.2 சேர்த்து லிட்டருக்கு ரூ. 5 வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து லிட்டருக்கு ரூ.2 வழங்கிய ஆவின் மேலாளருக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க சார்பில் நன்றி தெரிவித்தனர். உடன் சிபிஎம் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.</p>
