கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
3 Jul 2026, 8:49 pm
<p><strong>கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி  பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி, ஜூலை 3- பாலுக்கான கொள் முதல் விலையினை லிட்டர் ஒன்று க்கு ரூபாய் 10 உயர்த்தி, பசும் பாலுக்கு லிட்டருக்கு ஒன்றுக்கு ரூ.45ம், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.60ம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும், ஊக்கத்தொ கையை 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் வெண்மணி சந்திரன் தலைமை தாங்கினார்,. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் ரவி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் எம்.சுடலை ராஜ் ஆகியோர் ஆதரித்து பேசி னார். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பாலையும், சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். BMC-யை ஆவி ஒன்றிய நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும், கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் தட்டுபாடு இல்லாமல் கிடைக்கவும். கால் நடைகளுக்கான இன்சூரன்ஸ் திட்டத்தில் பிரிமியம் தொகை யை ஒன்றிய, மாநில அரசுகளே முழுமையாக ஏற்று அம லாக்கிட வேண்டும். தேவையான மருத்துவர்களை நியமித்து அனைத்து பால் உற்பத்தி யாளர்களின் கால்நடைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்திட வேண்டும், ஆவினுக்கு ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகிய வற்றிற்கு தனித்தனி அதிகாரி களை நியமனம் செய்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பால்வளத்துறை பதிவாளரிடம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராமசுப்பு, மாவட்ட தலைவர் சுப்பையா ,தென்காசி மாவட்ட செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
