பால் கொள்முதல் விலையை உயர்த்திடுக பால் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்
8 Dec 2025, 4:39 pm
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்திடுக பால் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>நாமக்கல், டிச.8- பால் கொள்முதல் விலை யை உயர்த்தித் தர வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்க மாநிலக்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தின் மாநி லக் குழு கூட்டம் திங்க ளன்று நாமக்கல் விவசாய சங்க மாவட்டக் குழு அலு வலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலை மை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பி. பெருமாள், மாநிலப்பொருளாளர் ஏ.எம்.முனு சாமி, மாநில நிர்வாகிகள் என்.சிவாஜி, பி. ராமநாதன், என்.செல்லத்துரை வெண்மணி சந்திரன் உள்பட மாநிலக்குழு உறுக்பினர் கள் கலந்து கொண்டனர். தற்போது பருத்திக்கொட்டை, புண் ணாக்கு, தவிடு, கலப்பு தீவனங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை ரூபாய் 10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூபாய் 45 எருமை பாலுக்கு ரூபாய் 60 அறிவிக்க வேண்டும். பால் உற்பத்தியா ளர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூபாய் 10 வீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சங்கத்தின் மாநில மாநாடு வருகின்ற 28.12.2025 ஆம் தேதியன்று தருமபுரியில் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக் கான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொள் ளும் ஊர்வலமும், 500 பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டை வெற்றிபெற செய் வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.</p>
