முந்தய பக்கம்

பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றிய மாநாடு

20 Nov 2025, 3:46 pm
பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றிய மாநாடு
<p><strong>பால் உற்பத்தியாளர் சங்க ஒன்றிய மாநாடு</strong></p> <p>நாமக்கல், நவ.20- சத்துணவு திட்டத்தில் பாலையும் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்க எருமப்பட்டி ஒன்றிய மாநாட்டில் வலியு றுத்தப்பட்டது. தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி ஒன்றியத்தின் முதல் மாநாடு லட்சுமி மஹாலில் வியாழனன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமை வகித்தார். மு.து.செல்வராஜ் பி. கருப்பண்ணன், எஸ்.கே.பழனிமுத்து, முரு கேசன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், இந் திய மாணவர் சங்க முன்னாள் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மூத்த தோழர் தங்கரத்தி னம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், தரமான கால்நடை கலப்பு தீவ னம் 50% மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிடு, பருத்திக்கொட்டை, புண் ணாக்கு, கலப்புத் தீவனங்கள், கால்நடைகள் விலை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள் முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு மாட்டுப் பாலுக்கு 45 ரூபாயும், எருமைப்பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி அறிவித் திட வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பாலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில், ஒன்றியத் தலைவராக பழனிமுத்து, செயலாளராக சத்யா, பொரு ளாளராக கருப்பண்ணன், துணைத் தலைவ ராக சசிகுமார், துணைச் செயலாளராக ஹரி கிருஷ்ணன் உட்பட 21 ஒன்றியக்குழு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram