தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பால் உற்பத்தியாளர் சங்க சேலம் மாவட்ட மாநாடு

13 Dec 2025, 5:13 pm
பால் உற்பத்தியாளர் சங்க சேலம் மாவட்ட மாநாடு
<p><strong>பால் உற்பத்தியாளர் சங்க சேலம் மாவட்ட மாநாடு</strong></p> <p>சேலம், டிச.13&ndash; பால் உற்பத்தியாளர்களையும், பால் தொழிலையும் பாதுகாத்திட, கொள்முதல் விலையை அதிகரித்து தரவேண்டும் என பால் உற்பத்தியா ளர் சங்க சேலம் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. &nbsp;தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தின் 7வது மாவட்ட மாநாடு வெள்ளியன்று, ஓமலூர் ஓகேபி மினி மண்டபத்தில் நடைபெற்றது. மாவட் டத் தலைவர் எஸ்.மணி தலைமை &nbsp;தாங்கினார். மாநில துணைச் செயலா ளர் சிவாஜி மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மாவட்டச் செய லாளர் பி.அரியாக்கவுண்டர் வேலை அறிக்கையை முன்வைத்தார். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எ.ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் &nbsp;ஏ.அன்பழகன் &nbsp;ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச் &nbsp;செயலாளர் பி.பெருமாள், மாநிலப் பொருளாளர் முனுசாமி சிறப்புரை யாற்றினர். &nbsp;இம்மாநாட்டில், பசும்பால் கொள் முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்கு &nbsp;ரூ.52 ஆகவும் உயர்த்தி வழங்க &nbsp;வேண்டும். தரமான தீவனத்தை 50% மானிய விலையில் வழங்கவும், கால் நடைகளுக்குத் தேவையான மருந்து களை தட்டுப்பாடின்றி வழங்க வேண் டும். சேலம் மாவட்டத்தில் மூன்று &nbsp;முக்கிய இடங்களில் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கால்நடை &nbsp;மருத்துவமனைகள் மற்றும் அவசர கால ஊர்தி வசதி ஏற்படுத்திட வேண் டும். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாலின் தரத்தை நிர்ணயம் செய்ய ஐ.எஸ்.ஐ பார் முலாவை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவராக ராஜேந்திரன், செயலாளராக பி.அரி யாக்கவுண்டர், பொருளாளர் ராம லிங்கம், துணைத்தலைவர்களாக &nbsp;அழகுதுரை, பொன்னுசாமி, துணைச் செயலாளர்களாக செல்வக்குமார், இளவரசன் உட்பட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட் டது. மாவட்ட துணைத் தலைவர் என்.பொன்னுசாமி நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.