தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

8 Jan 2026, 2:44 pm
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.8 - பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45, &nbsp; எருமைப்பால் ரூ.60 ஆக விலை உயர்த்தி வழங்கக் கோரி வியாழனன்று &nbsp;தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் &nbsp;சார்பில் செங்கப்பள்ளி, &nbsp;நத்தக்காடை யூர் ஆகிய இரு பகுதிகளில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் தமிழ்நாடு &nbsp;பால் உற்பத்தியாளர் சங்கம் நடத்திய &nbsp;ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருப் பூர் மாவட்டத்திலும் நடைபெற்றது. ஊத் துக்குளி ஒன்றியம் செங்கப்பள்ளியில் &nbsp;பால் உற்பத்தியாளர் சங்க திருப்பூர் &nbsp;மாவட்டக்குழு உறுப்பினர் பழனிச்சாமி &nbsp;தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவது, ஊக்கத் தொகை நிலுவை பாக்கி வழங்க &nbsp;வேண்டும். கலப்பு தீவனம் 50% மானிய &nbsp;விலையில் வழங்க வேண்டும். ஆரம்ப &nbsp;சங்க பணியாளர்களுக்கு பணி பாது காப்பு, ஊதிய உயர்வு வழங்க வேண் டும். &nbsp;குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் &nbsp;வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் உற்பத் தியாளர் சங்க மாவட்டச் செயலாளர் &nbsp;கை.கொளந்தசாமி, தமிழ்நாடு விவ சாய சங்க முன்னாள் தலைவர் பழ னிச்சாமி உள்ளிட்டோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் ஈஸ்வரி, &nbsp;ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ் ணன், சுப்பிரமணி, முருகசாமி, முத்து சாமி உட்பட திரளான பால் உற்பத்தியா ளர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் நத்தக்காடையூரில் சங் கத்தின் மாவட்டத் தலைவர் பொன். வேலுச்சாமி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில், மாநில &nbsp;துணைத் தலைவர் ஏ.எம்.முனுசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.எஸ். செல்வராஜ் உட்பட பால் உற்பத்தியா ளர்கள் பலர் பங்கேற்றனர்.செல்ல முத்து நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.