பால் உற்பத்தியாளர் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு
29 Nov 2025, 4:58 pm
<p><strong>பால் உற்பத்தியாளர் சங்க நாமக்கல் மாவட்ட மாநாடு</strong></p>
<p>நாமக்கல், நவ.29- பால் உற்பத்தியாளர்களையும் பால் தொழிலையும் பாதுகாத்திட வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நாமக் கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 9 ஆவது மாநாடு ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அல வாய்பட்டி கிராமத்தில் சனியன்று நடைபெற்றது. மாநாட்டு கொடியை சண்முகம் ஏற்றி வைத்தார். மாவட் டத் தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி தலைமை வகித்தார். அஞ்சலி தீர் மானத்தை தனேந்திரன் வாசித்தார். கோபிநாத் வரவேற்றார். பால் உற் பத்தியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் படைவீடு பெருமாள் துவக்கவுரையாற்றினார். விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் ஏ. ஆதிநாராயணன் வாழ்த்திப் பேசி னார். வேலை அறிக்கையை மாவட் டச் (பொ) செயலாளர் எம்.ஜோதி முன்வைத்தார். இம்மாநாட்டில், தவிடு பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவ னங்கள், கால்நடைகள் விலை உயர்ந்துள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு 45 ரூபாயும், எருமைப் பால் ஒரு லிட்டருக்கு 60 ரூபாயும் உயர்த்தி வழங்கிட வேண்டும். தர மான கால்நடை தீவனம் 50 சதம் மானிய விலையில் வழங்கிட வேண் டும். குழந்தைகள் சத்துணவு திட் டத்தில் பாலையும், பால் பொருட்க ளையும் வழங்கிட வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப் பாடு இல்லாமல் கிடைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் ஐஎஸ்ஐ ஃபார் முலாவை பயன்படுத்தி பாலின் தரத்தை நிர்ணயம் செய்வதை போல, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். பால் விலை குறைப்பை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.பூபதி, செயலாள ராக என்.ஜோதி, பொருளாளராக பி.தங்கரத்தினம், உதவித் தலை வர்களாக ஏ.ஆர்.முத்துசாமி, மு.து.செல்வராஜ், ஆர்.காளியப்பன், உதவிச்செயலாளராக எம்.தனேந் திரன், கே.சின்னசாமி, பூங்கொடி உள்ளிட்ட 31 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து பால் உற்பத்தியாளர் சங்க மாநிலப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி பேசி னார். மு.து.செல்வராஜ் நன்றி கூறி னார்.</p>
