திருப்பூர் மாவட்டத்திற்கு ஆவின் பால்பண்ணை உருவாக்க பால் உற்பத்தியாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்
23 Dec 2025, 4:05 pm
<p><strong>திருப்பூர் மாவட்டத்திற்கு ஆவின் பால்பண்ணை உருவாக்க பால் உற்பத்தியாளர் சங்க மாநாடு வலியுறுத்தல்</strong></p>
<p>திருப்பூர், டிச.23- திருப்பூர் மாவட்டத்திற்கு ஆவின் பால் பண்ணை (டெய்ரி) உருவாக்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங் கத்தின் திருப்பூர் மாவட்ட 2 ஆவது மாநாடு ஊத்துக்குளி தாலுகா செங்கப்பள்ளியில் தனி யார் மண்டபத்தில் செவ்வாயன்று நடை பெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே. கொளந்தசாமி தலைமை வகித்தார். சங்க உறுப்பினர் ஈஸ் வரி சங்க கொடியை ஏற்றி வைத்தார். பி. வேலுச்சாமி வரவேற்றார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.பரமசிவம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், பால் கொள்முதல் விலையை மாட்டுப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.45, எருமைப்பால் ரூ.60 என விலை உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்த வேண் டும். உலர் கால்நடை தீவனம் 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும். திருப் பூர் மாவட்டத்திற்கு ஆவின் பால்வளப் பண்ணை (டெய்ரி) உருவாக்க வேண்டும். கால்நடை ஆம்புலன்ஸ் சேவையை விரிவு படுத்த வேண்டும். கால்நடைகளை வேட்டை யாடும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் உயிரிழந்த கால்நடைகளுக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு: பால் உற்பத்தியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவராக பொன்.வேலுச்சாமி, செயலாளராக எஸ்.கே.கொளந்தசாமி, பொருளாளராக எஸ்.வேலுச்சாமி, துணை தலைவராக எஸ்.பரமசிவம், துணைச் செய லாளராக எஸ்.லோகநாதன் உட்பட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட் டது. மேலும், டிசம்பர் 28 ஆம் தேதி தருமபுரி யில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு 10 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாநி லப் பொருளாளர் ஏ.எம்.முனுசாமி நிறை வுரை ஆற்றினார். மாநாட்டின் முடிவில், சு. கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.</p>
