பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் துறைச் செயலாளரிடம் பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை
23 Jun 2026, 9:16 pm
<p><strong>பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டும் துறைச் செயலாளரிடம் பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூன் 23 - பால் கொள்முதல் விலையை ரூ.10 உயர்த்த வேண்டுமென்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக பால்வளத்துறை செயலாளர் அனுஜார்ஜியிடம் திங்களன்று (ஜூன் 22) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சி.வெண்மணி சந்திரன், பொதுச்செயலாளர் பி.பெருமாள், பொருளாளர் எஸ்.இரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். அதில், 2022ஆம் ஆண்டு பாலுக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் கறவை மாடுகளுக்கு தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாததால் கடும் சிரமத்தில் உள்ளனர். தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு 5 முதல் 10 ரூபாய் வரை விலையை உயர்த்திக் கொடுக்கின்றன. இதன் காரணமாக ஆவினுக்கு பால் வரத்து குறைந்து பல கூட்டுறவு சங்கங்கள் மூடப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் மேலும் பல சங்கங்கள் மூடப்படும். எனவே, கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி பசும்பால் ரூ.45, எருமைப்பால் ரூ.60 என நிர்ணயிக்க வேண்டும். ஊக்கத்தொகையாக லிட்டருக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். இடுபொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்வதால் வருடாவருடம் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.</p>
