தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியர்கள் 23 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆபத்து?

28 Oct 2026, 9:22 pm
இந்தியர்கள் 23 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆபத்து?

இந்தியர்கள் 23 ஆயிரம் பேரின் வேலைக்கு ஆபத்து?

புதுதில்லி, அக். 27 -உலக அளவிலும் இந்தியாவிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டிற்கு வேகமாக மாறி வருகின்றன. இதன் பின்னணியில் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் இறங்கியுள்ளன.

60,000 தொழிலாளர்களை நீக்கும் மைக்ரோசாப்ட்

அந்த வகையில், செலவுக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு என்ற பெயரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 25 சதவீதத் தொழிலாளர்களை - சுமார் 60,000 தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றும் குழுக்களின் துணைத் தலைவர் பதவி மற்றும் அதற்கு கீழ் உள்ள ஊழியர்கள், தாங்களாகவே விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் சில சலுகைகளை வழங்குவதாகவும், மாறாக, நிறுவனமே நேரடியாகப் பணிநீக்கம் செய்யும் சூழ்நிலையை உருவாக்கினால், அந்த நபர்களுக்கு எந்த ஒரு சலுகைகளும் கிடைக்காது என்று மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகத் தரவுகளின்படி, தற்போதைய நிலையில், இந்தியாவில் தோராயமாக 23,000 பேர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில், அவர்களின் வேலைக்கும், அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசாவில் பணிபுரியும் இந்தியர்களின் வேலைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் 24,500 பணிநீக்கங்கள்

இந்தியாவில் முன்னணியில் உள்ள டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்சிஎல் உள்ளிட்ட 6 ஐ.டி. நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பிரிவுகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை அக்டோபர் 2026 நிலவரப்படி 24,422 ஆகக் குறைந்துள்ளது. அதாவது பணி நீக்கத்துக்கும் புதிய பணி நியமனத்திற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளதால் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைகிறது.

2025 அக்டோபரில் இந்த நிறுவனங்களின் மொத்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 8,22,000 ஆக இருந்தது. தற்போது அது 7,98,000 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, 2.97 சதவீதத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்த நிறுவனங்களில் 92,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; ஆனால், புதிதாக 68,000 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர, கூகுள், மெட்டா, அமேசான், ஊபர், ஈபே, ஆரக்கிள் போன்ற நிறுவனங்களும் அதிகளவிலான தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. இந்நிலையிலேயே, மைக்ரோசாப்ட் நிறுவனம், தொழிலாளர்களை வெளியேற்றும் அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.