தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘அடுத்த 18 மாதங்களில் பல அலுவலகப் பணிகளை ஏஐ துல்லியமாகச் செய்யும்’

22 May 2026, 9:02 pm
‘அடுத்த 18 மாதங்களில் பல அலுவலகப் பணிகளை ஏஐ துல்லியமாகச் செய்யும்’

‘அடுத்த 18 மாதங்களில் பல அலுவலகப் பணிகளை ஏஐ துல்லியமாகச் செய்யும்’

புதுதில்லி, மே 22 - ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் அண்மையில் மென்பொருள் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்திருந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் ஏஐ (Microsoft AI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முஸ்தபா சுலைமானும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி குறித்து மிக முக்கியமான எச்ச ரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அலுவலகப் பணிகளில் மனிதர்களுக்கு நிகரான ஏஐ

நாடு ஒன்றில் பேசிய முஸ்தபா சுலைமான், அடுத்த 18 மாதங் களுக்குள், அதாவது 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள், பல வகையான பொதுவான அலுவல கப் பணிகளை மனிதர்களுக்கு நிகரான துல்லியத்துடன் செய்து முடிக்கும் திறனை ஏஐ தொழில் நுட்பம் எட்டிவிடும் என்று கணித் துள்ளார்.

“நாம் தற்போது பயன்படுத்தும் ஏஐ கருவிகள் வெறும் ஆரம்பக் கட்டமே. அடுத்த ஒன்றரை ஆண்டு களில் வரவிருக்கும் அடுத்த தலை முறை ஏஐ மாதிரிகள், அலுவல கங்களில் மனிதர்கள் செய்யும் தினசரிப் பணிகளை மிக எளிதாக, குறைந்த செலவில் மற்றும் அதி வேகமாகச் செய்து முடிக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்படும் முக்கியத் துறைகள்

இந்த ஏஐ தொழில்நுட்பப் புரட்சியால் வழக்கமான தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமன்றி, பல்வேறு அலுவலகம் சார்ந்த வேலைவாய்ப்புகளும் கடுமை யான மாற்றங்களைச் சந்திக்க நேரிடும் என்று சுலைமான் எச்ச ரித்துள்ளார். குறிப்பாகப் பின்வரும் துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்:

வழக்கறிஞர்கள் : சட்ட ஆவ ணங்களை ஆய்வு செய்தல், முந்தைய தீர்ப்புகளைத் திரட்டுதல் மற்றும் ஒப்பந்தங்களை உரு வாக்குதல் போன்ற பணிகள்.

கணக்காளர்கள் : நிதிநிலை அறிக்கைகளைத் தயாரித்தல், வரி கணக்கீடுகள் மற்றும் தணிக்கை (Auditing) சார்ந்த பணிகள்.

சந்தைப்படுத்துபவர்கள் : விளம்பர உத்திகளை உருவாக்கு தல், நுகர்வோர் தரவுகளைப் பகுப் பாய்வு செய்தல் மற்றும் உள்ளட க்கங்களை (Content) உருவாக்குதல்.

மேலாளர்கள் : திட்டங் களை ஒருங்கிணைத்தல், பணியாளர்களின் செயல்பாடு களைக் கண்காணித்தல் மற்றும் நிர்வாக முடிவுகளை எடுத்தல்.

மாற்றத்திற்குத் தயாராக வேண்டிய கட்டாயம்

ஏஐ தொழில்நுட்பத்தின் இந்த அசுர வேக ஊடுருவல் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்க ளது செலவுகளைக் குறைக்க ஏஐ கருவிகளை அதிகளவில் பயன் படுத்தத் துவங்கும். இதனால் லட்சக்கணக்கான அலுவலக ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகலாம் அல்லது அவர்களின் பணித்தன்மை முற்றிலும் மாறலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.