முந்தய பக்கம்

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு - மதமாற்ற முயற்சி காரணம் அல்ல!

18 Feb 2026, 7:18 am
மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு - மதமாற்ற முயற்சி காரணம் அல்ல!

மைக்கேல்பட்டி மாணவி தற்கொலை வழக்கு: மதமாற்ற முயற்சி காரணம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி பகுதியில் 12ஆம் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு தொடர்பாக தொடக்கத்தில் மாநில காவல்துறை விசாரணை மேற்கொண்டது. பின்னர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
விசாரணையின் போது மாணவியின் குடும்பத்தினர், பள்ளி நிர்வாகம் மற்றும் தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் பிற சாட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் கட்டாய மதமாற்றத்தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள், இந்த விவகாரத்தில் மத கலவரத்தை தூண்டும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மாணவி தற்கொலைக்கு கட்டாய மதமாற்ற முயற்சிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) இந்திய உச்சநீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் மாணவி மீது கட்டாய மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அதில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram