மியாசி பள்ளி வெள்ளி விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
13 Aug 2026, 12:40 am

மியாசி பள்ளி வெள்ளி விழா முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சென்னை, ஆக. 12–சென்னை மியாசி பள்ளியில் 2001-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாண வர்களின் 25-வது ஆண்டு வெள்ளி விழாச் சந்திப்பு மண்ணடியில் உள்ள பள்ளி வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் உலகெங்கிலும் இருந்து வருகை தந்த 200-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து

கொண்டு பழைய நினைவு களை மீட்டெடுத்தனர். விழாவில் முன்னாள் முதல்வர் டாக்டர் தலத் பாத்திமா உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் சுமார் 50 பேர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், பள்ளி மாணவர்க ளின் கல்வி உதவிக்காக முதற்கட்டமாக ரூ. 1.50 லட்சம் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 3 லட்சம் வழங்குவதாகவும், இதற்கெனத் தனியாக அறக்கட்டளை தொடங்கப் படுவதாகவும் அறிவிக்கப் பட்டது. விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் திறந்த அரங்கு நிகழ்ச்சிகளுடன் இந்த விழா நெகிழ்ச்சி யுடன் நிறைவடைந்தது.