தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

30 Mar 2026, 3:40 pm
விளையாட்டு

மியாமி ஓபன் டென்னிஸ் இத்தாலியின் சின்னர் சாம்பியன்

முன்னணி சர்வதேச டென் னிஸ் போட்டிகளில் ஒன் றான மியாமி ஓபன் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்றது. இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள இத்தாலி யின் சின்னர், தரவரிசையில் 21ஆவது இடத்தில் உள்ள செக் குடியரசின் ஜிரி லெக்காவை எதிர்கொண்டார். மழை காரணமாக ஆட்டம் இருமுறை தடைப்பட்ட நிலையில், அதிரடி சர்வீஸ்  மூலம் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி சின்னர் 6-4, 6-4 என்ற நேர்  செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். சாதனை 24 வயதான சின்னர், ஒரே ஆண்டில்  இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் ஆகிய இரண்டு தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்று ‘சன்ஷைன் டபுள்’ சாதனையைப் படைத்துள்ளார். 2017இல் ரோஜர் பெடரருக்குப் (சுவிஸ் வீரர்) பிறகு இந்தச் சாதனையைச் செய்த முதல் வீரர் சின்னரே ஆவார். அதே போல ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 (ATP Masters 1000) அளவிலான போட்டிகளில் சின்னர் தொடர்ந்து 34 செட்களை வென்று தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ‘வார்’ தொழில்நுட்பத்திற்கு கடும் எதிர்ப்பு

கால்பந்து விளையாட்டில் மிக முக்கியமானது ‘வார்’ (VAR - Video Assistant Referee : நடுவரின் ஆய்வு) தொழில்நுட்பம் ஆகும். வீரர்களின் செயல்பாடு, நடுவர்களின் முடிவு சரியானதா? என வீடியோ மூலம் ஆய்வு செய்யப்படும் தொழில்நுட்பம் ஆகும். கிரிக்கெட்டில் மூன்றாம் நடுவர்   என்றால், கால்பந்தில் ‘வார்’ தொழில்நுட்பம் ஆகும். இந்நிலையில், கால்பந்து ரசிகர் அமைப்பான எப்எஸ்ஏ (Football Supporters’ Association) நடத்திய சமீபத்திய ஆய்வில், 75 சதவீதத்திற்கும் அதிகமான பிரீமியர் லீக் (பிரிட்டன் நாடுகளில் நடைபெறும் கிளப் தொடர்) ரசிகர்கள் ‘வார்’ தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து பயன் படுத்துவதை ஆதரிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.  ஆய்வில் பங்கேற்றவர்களில் 75.7% பேர் கால்பந்தில் வார் பயன்பாட்டை ஆதரிக்கவில்லை. சுமார் 91.7% ரசிகர்கள், கோல் அடித்தவுடன் வெளிப்படும் தன்னிச்சையான மகிழ்ச்சி யையும் கொண்டாட்டத்தையும் வார் தொழில்நுட்பம் பறித்துவிட்டதாகக் கருதுகின்றனர் என ஆய்வின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ‘வார்’ தொழில்நுட்பத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விளக்கம் ரசிகர்களின் இந்த அதிருப்திக்கு பதிலளிக்கும் விதமாக பிரீமியர் லீக் நிர்வாகம் தரப்பில்,  “வார் பயன்பாட்டினால் முடி வுகள் மிகவும் துல்லியமாக எடுக்கப்படுகின்றன. கடந்த சில சீசன்களில், ஒரு சீசனுக்குச் சராசரியாக 100 தவறான முடிவுகள் வார் மூலம் மாற்றப்பட்டுள்ளன. மற்ற ஐரோப்பிய லீக்குகளுடன் (சாம்பியன்ஸ் லீக் போன்றவை) ஒப்பிடும் போது, பிரீமியர் லீக்கில் வார்-இன் தலையீடு மிகக்குறை வாகவே உள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்யவும், ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடவும் தாங்கள் தயாராக உள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.