தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

125 நாட்கள் வேலை உத்தரவாதமல்ல; கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு சாவுமணி - பி.வெங்கட் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

27 Jun 2026, 8:32 pm
125 நாட்கள் வேலை உத்தரவாதமல்ல; கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு சாவுமணி - பி.வெங்கட் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

125 நாட்கள் வேலை உத்தரவாதமல்ல; கிராமப்புற வாழ்வாதாரத்திற்கு சாவுமணி - பி.வெங்கட்

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGA) முற்றிலுமாகச் சிதைத்துவிட்டு, அதன் பிறகு 125 நாட்கள் வேலைக்கு உத்தரவா தம் அளிக்கப்படும் என்று கூறுவது, ஒரு மரத்தை வேரோடு வெட்டி சாய்த்துவிட்டு அதன் நிழலுக்கு உத்தரவாதம் அளிப்ப தைப் போன்றதுதான்.”

கடந்த இருபது ஆண்டுகளாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை கள், விவசாயத் தொழிலாளர்கள், பெண் கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளின் குறைந்தபட்ச வாழ்வாதாரப் பாது காப்பு அரணாகச் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தற்போது இத்திட்டத்தி ற்குப் பதிலாக விபி- ஜி ராம் ஜி (‘VB-GRAMG’) என்ற புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதற்கான வரைவு விதிகள் (GSR 403(E)) வெளி யிடப்பட்டு, வரும் ஜூலை 1 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த வரைவு விதிகளை உற்று நோக்கி னால், புதிய திட்டம் வேலைவாய்ப்பு உத்தரவாதத்தையே பலவீனப்படுத்துவ தோடு, அதை முற்றிலுமாக அழிப்ப தற்காகவே இந்த விதிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.

புதிய உள்கட்டமைப்பு என்பது 55-க்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகள், விதிகள், நூற்றுக்கணக்கான துணை விதிகள் மற்றும் முற்றிலும் புதியதொரு நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்டுள் ளது. இந்த அமைப்பு வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வலுப்படுத்த உரு வாக்கப்படவில்லை; மாறாக அதன் உரிமை சார்ந்த தன்மையைக் குலைக் கவே உருவாக்கப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீட்டு முரண்பாடு

வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் எந்தவொரு வேலை வாய்ப்புத் திட்டமும் வெறும் வாக்குறுதி களால் உயிர்வாழ்வதில்லை; அது நிதியால்தான் வாழ்கிறது. இங்கேயே முதல் பெரிய முரண்பாடு வெளிப்படு கிறது. 125 நாட்கள் வேலை தருவதாகக் கூறிக்கொண்டு, ஒன்றிய அரசு இந்த புதிய திட்டத்திற்காக மத்திய பட்ஜெட்டில் வெறும் ₹95,000 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மாநில வாரியான வேலைவாய்ப்புப் புள்ளிவிவரங்கள் இந்த ஒதுக்கீடு 125 நாட்கள் வேலைக்கு எள்ளளவும் போதுமானது அல்ல என்பதை நிரூபிக்கின்றன.

அதிகாரப்பூர்வ அரசுத் தரவுக ளின்படி, கடந்த ஆண்டில் உருவாக்கப் பட்ட சராசரி வேலை நாட்களின் விவரம் வருமாறு:

Y கேரளா: 57.81 நாட்கள்

Y தெலுங்கானா: 50.24 நாட்கள்

Y தமிழ்நாடு: 48.54 நாட்கள்

Y மேற்கு வங்கம்: 44.12 நாட்கள்

Y ஆந்திரப் பிரதேசம்: 42.35 நாட்கள்

Y பீகார்: 30.94 நாட்கள்

Y உத்தரப் பிரதேசம்: 27.50 நாட்கள்

Y மத்தியப் பிரதேசம்: 25.66 நாட்கள்

Y மகாராஷ்டிரா: 14.40 நாட்கள்

Y ஹரியானா: 13.78 நாட்கள்

தற்போதைய சூழலிலேயே 15 முதல் 50 நாட்கள் வேலைகளைக் கூடச் சரியாக வழங்க முடியாத அரசாங்கம், வெறும் ₹95,000 கோடி ஒதுக்கீட்டில் திடீரென 125 நாட்களுக்கு எவ்வாறு உத்தரவாதம் அளிக்க முடியும்?

ஏமாற்றுக் கணக்கு

ஒன்றிய அரசின் உண்மையான முகம் விதி 4(3)-இல் அம்பலமாகிறது. உண்மையான 125 நாட்கள் வேலை வாய்ப்பு உத்தரவாதத்தை அமல் படுத்த பிரம்மாண்டமான கூடுதல் நிதி ஆதாரங்கள் தேவைப்படும். ஒன்றிய அரசு இந்த 125 நாட்கள் உத்தரவா தத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் என்று முன்வைத்தாலும், அதை உண்மையாக்குவதற்குத் தேவை யான நிதி ஆதாரங்களை வழங்குவ தற்கான பொறுப்பை ஏற்க அது மறுக்கிறது.உண்மையான 125 நாட்கள் வேலை வாய்ப்பு உத்தரவாதத்தை அமல் படுத்த பிரம்மாண்டமான கூடுதல் நிதி ஆதாரங்கள் தேவைப்படும். ஒன்றிய அரசு இந்த 125 நாட்கள் உத்தரவா தத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் என்று முன்வைத்தாலும், அதை உண்மையாக்குவதற்குத் தேவை யான நிதி ஆதாரங்களை வழங்குவ தற்கான பொறுப்பை ஏற்க அது மறுக்கிறது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தவிர்த்த 17 முக்கிய மாநிலங்களின் தரவுகளை ஆய்வு செய்தால், அங்கு 7.69 கோடி செயலில் உள்ள குடும்ப வேலை அட்டை கள் (Job Cards) உள்ளன. இத்தொழிலா ளர்களுக்கு 125 நாட்கள் வேலை வழங்க சுமார் ₹3.61 லட்சம் கோடி தேவைப்படும். ஆனால் ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள நிதி வெறும் ₹85,605 கோடி மட்டுமே. மாநிலங்களின் 40 சதவீதப் பங்களிப்பான ₹57,071 கோடி யைச் சேர்த்தாலும், மொத்தம் ₹1.43 லட்சம் கோடி மட்டுமே கிடைக்கும்.

இந்த வரையறுக்கப்பட்ட நிதியைக் கொண்டு, ஒரு வருடத்திற்குச் சராசரி யாக 48.5 வேலை நாட்களை மட்டுமே வழங்க முடியும். இதன் படி பார்த்தால், ஹரியானாவில் தொழிலாளர்களுக்கு சுமார் 23 நாட்களும், மகாராஷ்டிராவில் சுமார் 24 நாட்களும் மட்டுமே வேலை கிடைக்கும். அதாவது, 125 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்யத் தேவையான தொகையை விட ₹2.18 லட்சம் கோடி பற்றாக்குறை உள்ளது. மேலும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி யைத் தாண்டி ஒன்றிய அரசு கூடுதலாக எந்த நிதியும் வழங்காது என வரைவு விதிகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன.

மாநிலங்கள் மீது சுமையை ஏற்றுதல்

மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்த ₹2.18 லட்சம் கோடி பற்றாக்குறையை நிரப்பும் சுமை மாநிலங்களின் மீது சுமத்தப்படுகிறது. எளிய சொற்களில் கூறினால்:

Y மோடி அரசின் பங்கு: சுமார் ₹85,000 கோடி (வெறும் 30 சதவீதம்). Y மாநில அரசுகளின் பங்கு: கிட்டத்தட்ட ₹2.75 லட்சம் கோடி (நெருங்கி 70 சதவீதம்).

இந்த புள்ளிவிவரங்கள் ஒரு அடிப் படை அரசியல் உண்மையை வெளிப் படுத்துகின்றன: உத்தரவாதம் ஒன்றிய அரசுடையது, விளம்பரம் ஒன்றிய அரசு டையது, கட்டுப்பாடு மோடியிடம் இருக்கும்; ஆனால் செலவு மட்டும் மாநிலங்களுடையது! திட்டம் தோல்வி யடைந்தால் பழி மாநில அரசுகளின் மீது விழும். இது பெரியவர்களால் நிச்ச யம் செய்யப்பட்ட திருமணம், ஆனால் வரதட்சணை பில் மட்டும் வேறொரு வரிடம் ஒப்படைக்கப்படுவதைப் போன்றது. “மாட்டைத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, கயிற்றை மட்டும் கையில் கொடுக்கும்” பழ மொழிதான் நமக்கு நினைவுக்கு வரு கிறது. மாநில அரசுகளால் இவ்வளவு பெரிய நிதிச் சுமையைத் தாங்க முடி யுமா? இறுதியில் பாதிக்கப்படப் போவது உழைக்கும் தொழிலாளர்கள்தான்.

பொறுப்புக்கூறல் நீக்கம்

வரைவு விதிகளின் விதி 3, வங்கி மற்றும் அஞ்சலகக் கணக்குகள் மூலம் நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) பற்றிப் பேசுகிறது. இருப்பினும், தொழி லாளர்களின் உரிமைகளுக்குப் பாது காப்பு அளிப்பது குறித்து எந்தத் தெளி வும் இல்லை. ஊதியம் தாமதமானால் அதற்கு யார் பொறுப்பு? இழப்பீடு எவ் வாறு வழங்கப்படும்? வேலையின்மைக் கான நிவாரணம் வழங்காவிட்டால் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? போன்ற கேள்விகளுக்கு வரைவு விதிகளில் தெளிவான பதில்கள் இல்லை. தொழிலாளர்களின் உரிமைகளை மையப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த விதிகள் அதிகாரத்துவ மற்றும் நிர்வாக நடைமுறைகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.

மிகவும் ஆபத்தான மாற்றம் விதி 4-இல் வருகிறது. குறிப்பாக, விதி 4(2)-இல் உள்ள ‘முன்னிருப்பு நிதி ஒதுக்கீடு’ (Normative Allocation) வழி முறை இத்திட்டத்தின் அடிப்படைத் தத்துவத்தையே மாற்ற முனைகிறது. வேலை அட்டைகள் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்ட கசப்பான அனுபவம் நமக்கு உண்டு.

Y விதி 4 – தேசிய வழிகாட்டுதல் குழுவின் அமைப்பு: இக்குழு முற்றிலும் ஒன்றிய, மாநில உயர் அதிகாரத்துவ அதிகாரி களைக் கொண்டு அமைக்கப்படும். இதற்கு நாடாளுமன்றத்திற்கோ சட்ட மன்றங்களுக்கோ எந்தப் பொறுப் புக்கூறலும் இல்லை. பஞ்சாயத்துகள், தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இதில் பிரதிநிதித்துவம் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மை யான கட்டுப்பாடு பிரதமரின் அலுவல கம் (PMO) மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் இந்துத்துவா நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்கும் அதிகார மையத்திடம் மட்டுமே குவிந்திருக்கும்.

Y விதி 8 – தேசிய வழிகாட்டுதல் குழுவின் செயல்பாடுகள்: நிதி ஒதுக்கீடு, செயல் பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மீது இக்குழுவிற்கு முற்றுரிமை வழங் கப்படுகிறது. இதனால் அதிகாரம் தேசிய அளவில் குவிக்கப்பட்டு, கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்துகளின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப் படுகின்றன.

Y விதி 3 – மத்திய கிராமின் ரோஜ்கர் உத்தர வாதக் கவுன்சில்: இதன் உறுப்பினர் கள் முற்றிலும் ஒன்றிய அரசால் நிய மிக்கப்படுவார்கள். சுயேச்சையான தொழிலாளர் அமைப்புகளுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை.

Y விதி 5 – அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களின் ராஜினாமா மற்றும் நீக்கம்: அரசைத் தட்டிக் கேட்கும் உறுப் பினர்களை எந்தவொரு உரிய நடைமுறையும் இன்றி ஒன்றிய அரசு தன்னிச்சையாக நீக்க முடியும். உள்ளின் பங்கேற்புடன் நடந்தன. புதிய திட்ட மோ கார்ப்பரேட் பாணியில் இயங்குகி றது: “நம்மைப் பற்றிய முடிவுகள், நாம் இல்லாமலும், நம்மால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமலும் எடுக்கப்படுகின்றன.” இதனால்தான் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இது வெறும் பெயரளவு மாற்றம் அல்ல; ஒரு அரசி யல் பிரகடனம். காந்தி என்ற பெயர் கிராம சுயராஜ்யம் மற்றும் பரவலாக் கப்பட்ட நிர்வாகத்தைக் குறித்தது. புதிய திட்டமோ அதற்கு நேர்மாறாக அதிகார மையப்படுத்தலை நோக்கியது. கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பு பெயர்ப்பலகையை மாற்றியுள்ளனர்.

நவீனமயமாக்கல் என்ற பெயரில் டிஜிட்டல் விலக்கு

வரைவு விதிகளில் உள்ள டிஜிட்டல் கட்டாயங்கள் ஏழைகளைத் திட்டத்திலி ருந்து விலக்கி வைக்கின்றன. மின்-அறிவிப்பு (e-KYC), முக அங்கீகாரம் (Face Authentication) மற்றும் தேசிய ொபைல் கண்காணிப்பு அமைப்பு (NMMS) ஆகியவை நவீனமய மாக்கல் என்ற பெயரில் திணிக்கப்படு கின்றன. ஆனால் கிராமப்புற யதார்த்தம் வேறானது: நெட்வொர்க் இல்லை என்றால் வேலை இல்லை; சர்வர் இல்லை என்றால் வருகைப்பதிவு இல்லை; கைரேகை பொருந்தவில்லை என்றால் ஊதியம் இல்லை! உழைப்பவரின் உரிமை மென்பொருளின் கைகளில் முடக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் காகி நாடாவில், மொபைல் சிக்னலுக்காகச் சாலையோரம் காத்திருந்த பெண் தொ ழிலாளர்கள் லாரி மோதி உயிரிழந்த கொடூரச் சம்பவமே தொழில்நுட்பம் ஏழைகளை எவ்வாறு வதைக்கிறது என்பதற்குச் சான்று.

திட்டத்தின் வேர்களை வெட்டிவிட்டு, காய்ந்து போன இலைகளுக்குப் பச்சை வண்ணம் பூசும் வேலை. எனவே, விவசாயத் தொழிலாளர்கள், ஏழைகள், பெண்கள், தலித்துகள், ஆதி வாசிகள் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த வரைவு விதிக ளைத் திரும்பப் பெறக் கோரி, நாடு தழு விய மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்ப வேண்டும்.

Y விபி-ஜி ராம் ஜி (‘VB-GRAMG’)வரைவு விதிகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்!

Y மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் நீடிக்கப் பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும்!

Y 200 நாட்கள் வேலைவாய்ப்பு சட்டப் பூர்வமாக உறுதி செய்யப்பட வேண்டும்!

Y முழுமையான மத்திய நிதி அரசிய லமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட வேண்டும்!

Y கிராம சபைகள் மற்றும் பஞ்சாயத்து களின் ஜனநாயக அதிகாரங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்!

Y ஏழைகளை விலக்கி வைக்கும் டிஜிட்டல் கட்டாயங்கள் ரத்து செய் யப்பட வேண்டும்! வேலை செய்யும் உரிமையைப் பாதுகாப்போம்! நாடு தழுவிய மக்கள் எதிர்ப்பைக் கட்டியெழுப்புவோம்!

எஸ்.பி.ஆர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.