மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை
10 Jul 2026, 9:18 pm
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து, சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றிய அலுவலகம் முன்பு, மாதர் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, பொருளாளர் பெருமா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று,பெத்தநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.</p>
