50,000 கோடியை மடை மாற்றும் இரட்டைத் துரோகம்!
9 Nov 2026, 8:18 pm

50,000 கோடியை மடை மாற்றும் இரட்டைத் துரோகம்!

கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதா ரத்திற்கு அரணாக விளங்கிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கடந்தஜூலை மாதம் ஒழித்துக்கட்டிய மோடி அரசு, அதன் பெயரையும் வடிவத்தையும் மாற்றி ‘விக்சித் பாரத்-கியாரன்டிஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்)’ அதாவது விபி ஜி ராம் ஜி திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.இத்திட்டத்தின் முதல் நான்கு மாத மெத்தனமான செயல்பாடுகள் மற்றும் கடுமையான விதிமுறைகளின் காரணமாக, ஒன்றிய அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வரை ‘சேமிப்பு’ அதாவது நிதி மிச்சமாகும் என்று தற்போதைய புள்ளிவிவ ரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இந்த பெரும்தொகையானது உரத்துக்கான மானியச் செலவுகளை ஈடுகட்ட மடைமாற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.

முன்பிருந்த ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப்புற மக்களின் சட்டப்பூர்வ உரிமை சார்ந்த தேவையின் அடிப்படையில் செயல்பட்டது. ஆனால், புதிய விபி ஜி ராம் ஜி திட்டத்தில் ஒன்றியஅரசு தனது பங்களிப்பை 60:40 என்ற விகிதாச்சாரத்தில் மாநிலங்களின் மீது சுமத்தியுள்ளதுடன், கட்டாயச் செலவுப் பகிர்வு மற்றும் கடுமையான விதிகளை விதித்து கிராமப்புற வேலைவாய்ப்பு களை முடக்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக95,692 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருந்தாலும், முதல் நான்கு மாதங்களில் வெறும் 5,539 கோடி ரூபாய் மட்டுமேஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்துள்ள இந்த மோசமான மாற்றத்தால், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மட்டுமே ஆண்டுதோறும் 5,000 கோடி ரூபாய்கூடுதல்நிதிச்சுமையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை கேட்டுவரும் ஏழை களுக்கு வேலை வழங்காமல், நிதி நெருக்கடியை ஏற்படுத்திதிட்டத்தைக் கைவிடும் சதிதான் அரங்கேறுகிறது.

அதே வேளையில், 2025-26 ஆம் நிதியாண்டில் உர மானியத்திற்காக 2.11 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், 2026-27 பட்ஜெட்டில் அது 1.71 லட்சம் கோடியாகக் குறைக்கப்பட்டது. ஒரே நிதியாண்டில் சுமார் ₹40,000 கோடிக்கும் அதிகமாக (கிட்டத்தட்ட 19% வரை) உர மானியத்தை ஒன்றிய அரசு நேரடியாக வெட்டியுள்ளது. இப்போது கிராமப்புற உழைப்பாளர்களின் உரிமையான வேலைவாய்ப்பு நிதியையும்அடித்துப்பறித்து அந்தப் பணத்தை உர மானிய இடைவெளியை நிரப்பப் பயன்படுத்துவது அப்பட்டமான ‘இரட்டைத் துரோகமாகும்’. விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் உர மானியக் குறைப்பு ஒருபுறம் என்றால், விவசாயக் கூலிகளின் வயிற்றிலடித்து அந்தத் தொகையை “மிச்சம்”என்று கூறி மடை மாற்றுவது கிராமப்புறப் பொருளாதாரத்தை அடியோடு நசுக்கும் கொடூரமாகும்.

கிராமப்புற உழைப்பாளர்களின் வியர்வையைச் சுரண்டி கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோதக் கொள்கை முறியடிக்கப்பட வேண்டும்.