முந்தய பக்கம்

100 நாள் வேலைக்கு முழு ஊதியம் வழங்கிடுக

31 May 2026, 11:01 pm
100 நாள் வேலைக்கு முழு ஊதியம் வழங்கிடுக
<p><strong>100 நாள் வேலைக்கு முழு ஊதியம் வழங்கிடுக</strong></p><p>சேலம், மே 31- ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கு நான்கு மணி நேர வேலை மற்றும் முழு ஊதி யம் வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சேலம் மாவட்டம், கல்வராயன் மலை, கருமந்துறையில் முதல் அமைப்பு மாநாடு சி.ராமர் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்க மாவட்டத் தலைவர் ஆர்.அமலா ராணி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன், மாவட்ட இணைச்செயலாளர் எஸ்.அழகு வேல், துணைத்தலைவர் ஏ.கந்தன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.காளிதாஸ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற மருத்துவ முகாம் கருமந்துறையில் நடத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உடன் துணையாளர் செல்ல பஸ் பாஸ், ரயில் பாஸ் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணி நேர வேலை, முழு ஊதியம் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தாலுகா தலைவராக சி.ராமர், செயலாளராக கே. குமார், பொருளாளராக பி.நடேசன், துணைத் தலைவர்களாக ஆர்.ரோஜா, எல்.சிவகுமார், இணைச் செயலாளர்களாக சி.பாஞ்சாலை, ஜி.சி.ஆனந்தன் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி யாக மாநிலத் தலைவர் தோ.வில்சன் நிறை வுரையாற்றினார். எல்.மாணிக்கம் நன்றி கூறி னார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram