இன்று முதல் ஊரக வேலை உறுதிச்சட்டம் ரத்து கிராமப்புற ஏழைகள் மீது மோடி அரசு கொடூர தாக்குதல்
30 Jun 2026, 9:11 pm

இன்று முதல் ஊரக வேலை உறுதிச்சட்டம் ரத்து கிராமப்புற ஏழைகள் மீது மோடி அரசு கொடூர தாக்குதல்

புதுதில்லி, ஜூன் 30 - மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச்சட்டம் (MGNREGA) தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும், திட்டமிட்டபடி ஜூலை 1-ஆம் தேதி அத னை ரத்து செய்து புதிய சட்டத்தைக் கொண்டு வருவது கிராமப்புற உழைக் கும் மக்களுக்கு இழைக்கப்படும் கொடூர மான அநீதி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகவும், புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ (VB-GRAMG) சட்டத்தின் வரைவு விதிகளில் உள்ள ஆபத்துகள் குறித்தும், ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹா னுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கள யதார்த்தமும் தொழில்நுட்பக் குளறுபடிகளும்

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் ‘பரபாலா’ என்ற பழங்குடியின கிராமத்தில் வேலை உறுதித் திட்டப் பணிகள் நடை பெறும் இடத்திற்கு நேரடியாகச் சென்றி ருந்ததாகக் கடிதத்தில் பிருந்தா காரத் குறிப்பிட்டுள்ளார். அங்கு கடும் வெயி லின் காரணமாகக் காலை 6.30 மணிக்கே பெண்கள் வேலைக்கு வந்து விடுகின்றனர். ஆனால், ஆன்லைன் வருகைப்பதிவு தளம் (App) இயங்காத தால், சுமார் மூன்றரை மணி நேரம் காத்தி ருந்துவிட்டு, அன்றைய வேலை நாட்க ளை இழந்து பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் அவல நிலை அடிக்கடி நிகழ்கிறது.

கடந்த டிசம்பரில் இச்சட்டம் கைவிடப் பட்டபோது, புதிய சட்டம் வரும் வரை பணி கள் தடையின்றித் தொடரும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப் பட்டிருந்தது. ஆனால், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் பெண் தொழிலாளர்களுக்கு வெறும் 18 நாட்கள் மட்டுமே வேலை கிடை த்துள்ளது. ‘பயோமெட்ரிக் முக அங்கீகார தொழில்நுட்பக் கோளாறு’ காரணமாக ஏராளமான ஏழைப் பெண்கள் திட்டத்தி லிருந்தே விடுபட்டுப் போயுள்ளனர். தொழிலாளர் சங்கங்களுடன் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் மே 22 அன்று அமைச்சகம் வெளியிட்ட புதிய வரைவு விதிகள்தான் இந்த அவல நிலைக்குக் காரணம் என்று அவர் சாடியுள்ளார்.

திய விதிகள், மாநிலங்களுக்குக் கடமைகளைச் சுமத்துவது குறித்துப் பேசும் அரசமைப்புச் சட்டத்தின் 258-ஆவது பிரிவை அப்பட்டமாக மீறு கின்றன. மாநில அரசு களின் ஒப்புதலைப் பெறாமல், நிதிச் சுமைகளையும் கட மைகளையும் ஒன்றியஅரசு அவர்கள் மீது பலவந்தமாகச் சுமத்துகிறது. ஆனால், முடிவெடுக்கும் செயல்பாட்டில் மாநி லங்களுக்கு எவ்விதப் பங்கும் அளிக்கப்படவில்லை. அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கரங்களில் மட்டுமே குவிக்கப் பட்டு, மாநில அரசுகள் வெறும் ஏவலாளி களாக மாற்றப்பட்டுள்ளன. இது இந்திய அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித் தத்து வத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

5 முக்கிய ஆபத்துகள்

புதிய சட்டத்தின் விதிகளை ஆய்வு செய்யும்போது பின்வரும் மிக மோசமான குறைபாடுகள் வெளிப்படுவதாக பிருந்தா காரத் சுட்டிக்காட்டியுள்ளார்:

பாகுபாடான நிதி ஒதுக்கீடு (விதி 396 E): தேவைக்கேற்ப நிதியளிக்கும் முறை மாற்றப்பட்டு, 16-ஆவது நிதிக் குழுவின் ‘கிடைமட்டப் பகிர்வு’ அளவு கோலின்படி இனி நிதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் மாநில உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) 42.5% முக்கியத்துவமும், மக்கள் தொகைக்கு 17.5% முக்கியத்துவமும் தரப்பட்டுள்ளது. வேலை கோரும் தொழிலாளர்களின் தேவைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், சராசரியாக அதிக வேலைநாட்களை வழங்கும் கேரளா போன்ற தென் மாநிலங்களும், தொழிலாளர்கள் அதிகம் உள்ள தமிழ்நாடும் (உயர்ந்த GSDP காரணமாக) இதனால் கடுமையாக நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்கும்.

மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு (விதி 403 E): வேலை வாய்ப்பை அதிகரிக்க ஒரு மாநில அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கீடு செய்வதை “கூடுதல் செலவு” என இவ்விதிகள் இழிவாகக் குறிப்பிடு கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு வரி விலக்கு அளிப்பதில் “கூடுதல் செலவு” செய்யும் ஒன்றிய அரசு, ஏழைகளுக்கான மாநிலங்களின் செலவினங்களை ஒன்றிய நிதி கண்காணிப்பு அமைப்புடன் கட்டாயமாக இணைப்பது மாநில சுயாட்சியின் மீதான தாக்குதலாகும்.

ஆதார் - e-KYC கட்டாயம் (விதி 397 E): ஏற்கனவே உள்ள மற்றும் இ- கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்யப்பட்டு ஆதார் எண் இணைக்கப்பட்ட வேலை அட்டைகள் மட்டுமே செல்லும் என்ற சிந்தனையற்ற விதியால், 44% ஏழைத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை மறுக்கப்படும் அபாயம் எழுந்துள் ளது. ஏனெனில், வெறும் 56% தொழி லாளர்கள் மட்டுமே தற்போது e-KYC செய்துள்ளதாக அமைச்சகமே ஒப்புக் கொண்டுள்ளது. கிராமப்புற உழைப்பாளி களிடம் ஸ்மார்ட்போன் போன்ற வசதிகள் இல்லாதபோது இதனை எப்படிக் கட்டாயமாக்கலாம்?

ஊதிய முறைகேடு (விதி 402 E): ஊதிய விகிதங்களை நிர்ணயிப்பது, விலைவாசிப் புள்ளியோடு ஊதியத்தை இணைப்பது குறித்து இந்த விதிகள் மௌனம் காக்கின்றன. ஆன்லைன் பதி விற்காகத் தொழிலாளர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நேரத்திற்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் (piece-rated) என்ற பெயரில் உற்பத்தித் திறன் அளவுகோல் மிக அதிக மாகவும், தன்னிச்சையாகவும் நிர்ண யிக்கப்படுவதால் ஏழைகளால் குறைந்த பட்ச ஊதியத்தைக் கூடப் பெற முடிவதில்லை

உணர்வற்ற அதிகாரக் குழுக்கள்: தேசிய அளவிலான வழிகாட்டு தல் குழுவில் (NLSC) மாநிலங்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே தரப் பட்டுள்ளன. இத்திட்டத்தில் 18% பழங்குடி யினரும், 17% பட்டியல் சாதியினரும், 50%-க்கும் அதிகமான பெண்களும் உள்ள நிலையில், அவர்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பழங்குடியினர் விவ கார அமைச்சகம், சமூக நீதி அமைச்சகம் மற்றும் பெண்கள் நல அமைச்சகம் ஆகிய மூன்றும் இக்குழுவிலிருந்து திட்ட மிட்டுத் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும், பஞ்சாயத்துகளின் அதிகாரங்களும் முழு மையாகப் பறிக்கப்பட்டு, வெளிப்படை யான சமூகத் தணிக்கைக்கான (Social Audit) எந்தவொரு சுயேச்சையான அமைப்பும் இதில் உருவாக்கப்படவில்லை.

விதிகளைத் திரும்பப் பெறவலியுறுத்தல் கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகைகளை அள்ளி வீசும் ஒன்றிய அரசு, ஏழை மக்களின் வயிற்றிலடிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள இந்த கார்ப்பரேட் மற்றும் அதிகாரத்துவ ஆதரவு விதி களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஜூலை 1 முதல் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ரத்து செய்யும் ஆபத்தான முடிவைக் கைவிட்டு, இத்திட்டத்தைத் தடையின்றித் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று பிருந்தா காரத் தனது கடிதத்தில் மிக உறுதியாக வலியுறுத்தியுள்ளார்.