7,220 அடி உயரத்தில் இருக்கும் அதிசயம் மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் மூச்சு விட சிரமப்படும் வீரர்கள்!
3 Jul 2026, 7:46 pm

7,220 அடி உயரத்தில் இருக்கும் அதிசயம் மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் மூச்சு விட சிரமப்படும் வீரர்கள்!

உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடு களில் ஒன்று மெக்சிகோ. உலகக் கோப்பை போட்டிகள் அங்குள்ள பிரசித்தி பெற்ற மைதானங்களில் ஒன்றான அஸ் டெகாவிலும் நடைபெற்று வருகிறது. இந்த மைதானம் கடல் மட்டத்திலிருந்து 7,220 அடி (2,200 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. ஒப்பீட்டிற்குச் சொன்னால், இங்கிலாந்தின் மிக உயர மான பிரீமியர் லீக் மைதானமான ‘தி ஹாதோர்ன்ஸ்’ மைதானத்தை விட 14 மடங்கு அதிக உயரத்திலுள்ளது.

இந்த மைதானம் தொடர்பாக ஒரு முக்கியமான ஆய்வறிக்கை வெளியாகி யுள்ளது. அது என்னவென்றால், ”மைதானம் இவ்வளவு அசுர உயரத்தில் இருப்பதால், அங்கு காற்றின் அழுத்தம் குறைவாக இருக்கும் ; காற்றில் ஆக்ஸி ஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும்; ஓடும் போது வீரர்களுக்கு லேசான அளவில் மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் வழக்கத்தை விட 15-20% கூடுதல் சோர்வைச் சந்திப்பார்கள். குறிப்பாக மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைவதால், இக்கட்டான சூழலில் வீரர்கள் சரியான முடிவுகளை எடுக்கத் தாமதமாகலாம். காற்றில் வேகம் அதிகமாக இருப்பதால், பந்தின் வேகம் வழக்கத்தை விட 40 யார்டு தூரத்திலிருந்தே கோல்கீப்பர்களுக்குப் பெரும் சவாலாக மாறும்” என விளையாட்டு வல்லுநர்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

ஐரோப்பா வீரர்களுக்கு சிக்கல்

இத்தனை முன்னாள் வெஸ்ட் ஹாம் (இங்கிலாந்து) வீரர் நைஜல் ரியோ-கோக்கரும் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஐரோப்பாவில் இருந்து வந்து இவ்வளவு உயரத்தில் விளையாடுவது மிகவும் கடி னம். முதல் 45 நிமிடங்களுக்கு உங் களால் மூச்சே விட முடியாது. எப்போது ஓட வேண்டும், எப்போது ஓய்வெடுக்க வேண்டும் என்பதை புத்திசாலித்தன மாகத் திட்டமிட வேண்டும். அப்போது தான் மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் வெற்றி கிடைக்கும்” என ஐரோப்பா கண்ட வீரர்களுக்கு அவர் அறி வுரை கூறியுள்ளார். இவரது அறிவுரை யைப் போலவே இங்கிலாந்து, பெல்ஜியம் அணிகளின் நாக் அவுட் ஆட்டங்கள் அமைந்தது.

மைதானம் மலையில் உள்ளதா? ; சுவாரஸ்ய பின்னணி

7,220 அடி உயரத்தில் இருந்தாலும் அஸ்டெகா மைதானம் ஒரு செங்குத் தான மலை உச்சியின் மீது கட்டப்பட வில்லை. ஆனால், அது கடல் மட்டத்தி லிருந்து மிக உயரமான ஒரு சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது. அதே போல மைதானம் இருக்கும் மெக்சிகோ நாட்டின் தலைநகரமான மெக்சிகோ சிட்டியும் உச்சியில் இல்லை. மாறாக, அது சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் இந்த பள்ளத்தாக்கு உரு வானது. இந்த ஒட்டுமொத்த பள்ளத் தாக்கே கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,300 அடி உயரத்தில் இருக்கிறது. அதாவது, நீங்கள் மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் இறங்கி, அங்கு ள்ள சாதாரண சாலையில் நடந்தாலே நீங்கள் ஒரு மலைப்பிரதேசத்தின் உய ரத்தில் தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

நமது ஊரோடு...

ஊட்டி கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,349 அடி (2,240 மீட்டர்) உயரத்தில் உள்ளது. அஸ்டெகா மைதானமும் அதே 7,220 அடி உயரத்தில் உள்ளது. அதா வது ஊட்டி நகரின் தரைப்பகுதியில் ஒரு பிரம்மாண்ட கால்பந்து மைதானத்தைக் கட்டினால் எப்படி இருக்குமோ, அதே போன்ற ஒரு சூழலில்தான் அஸ்டெகா மைதானம் அமைந்துள்ளது. இதுதான் காரணம் ஆகும்.