தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க ஏகாதிபத்திய முற்றுகையை உடைக்கும் தோழமைக்கரம்: கியூபாவிற்கு 1,700 டன் உணவு உதவிகளை வழங்கிய மெக்சிகோ மற்றும் பெலிஸ்!

13 Jun 2026, 9:20 pm
அமெரிக்க ஏகாதிபத்திய முற்றுகையை உடைக்கும் தோழமைக்கரம்:  கியூபாவிற்கு 1,700 டன் உணவு உதவிகளை வழங்கிய மெக்சிகோ மற்றும் பெலிஸ்!
<p><strong>அமெரிக்க ஏகாதிபத்திய முற்றுகையை உடைக்கும் தோழமைக்கரம்: கியூபாவிற்கு 1,700 டன் உணவு உதவிகளை வழங்கிய மெக்சிகோ மற்றும் பெலிஸ்!</strong> </p><p>ஹவானா: அமெரிக்காவின் கொடூரமான பொருளாதார மற்றும் எரிசக்தி முற்றுகையால் கடுமையான உணவுப் பற்றாக்குறையையும் மின்வெட்டையும் சந்தித்து வரும் கியூப மக்களுக்கு ஆதரவாக லத்தீன் அமெரிக்க நாடுகள் கரம் கோர்த்துள்ளன. மெக்சிகோ, பெலிஸ் ஆகிய அரசுகளிடமிருந்தும், அங்கு வாழும் கியூப ஆதரவாளர்களிடமிருந்தும் திரட் டப்பட்ட 1,700 டன் உணவு மற்றும் அத்தியாவசி யப் பொருட்கள் அடங்கிய கப்பல் கியூபாவின் ஹவானா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த இக்கட்டான சூழலில், தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த தோழமைக்கரத்தை கியூப ஜனாதிபதி தியாஸ்-கானல் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். ஏகாதிபத்திய இராணுவ அச்சுறுத்தல்களையும், பொருளாதார முற்றுகைகளையும் வீரத்துடன் எதிர்கொண்டு வரும் கியூப மக்களுக்கு, இந்த சர்வதேசத் தோழமை உணர்வு மாபெரும் பலத்தைத் தந்துள்ளதாக கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டு மன்றி, கொலம்பியா நாட்டிலிருந்தும் சுமார் 1,000 டன் அத்தியாவசியப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் கியூபாவை நோக்கிப் புறப்பட்டுள்ளது. அமெரிக்கா தனிமைப்படுத்த நினைத்தாலும், கியூபா உழைக்கும் மக்களின் சர்வதேசத் தோழமையால் நிமிர்ந்து நிற்கிறது என்பதற்கு இந்நிகழ்வே சாட்சி.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.