தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பிடுக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

13 hours before
மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பிடுக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பிடுக விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், செப்.8-மேட்டூர் உபரி நீரை நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டூர் அணை உபரி நீரை நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளில் நிரப்பி பாசன வசதியும் நிலத்தடி நீரையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு தற்போதைய வாடகையை மாற்றி வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் உத்தரவு என்ற பெயரில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றக் கூடாது. 2005 மின்சார மசோதாவை ஒன்றிய மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு தடையின்றி இலவச மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாயன்று நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பூபதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆண்டிபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், சங்கத்தின் மாவட்ட உதவித்தலைவருமான ஏ.ஆதிநாராயணன் துவக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.டி.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஏராளமாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.