தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜூன் 12- மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை! கேள்விக் குறியாகிறது குறுவை சாகுபடி?

18 May 2026, 9:12 pm
ஜூன் 12- மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை! கேள்விக் குறியாகிறது குறுவை சாகுபடி?

ஜூன் 12- மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை! கேள்விக் குறியாகிறது குறுவை சாகுபடி?

சென்னை, மே 18 - தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு அணையில், போதிய நீர் இருப்பு இல்லாததால், உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்க அணையின் நீர்மட்டம் குறைந்தது 90 அடியாவது இருக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்.

தற்போதைய நீர்மட்டமோ, திங்கட்கிழமை (மே 18) காலை நிலவரப்படி 79.07 அடியாக மட்டுமே உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலத்தில் நீர்மட்டம் 108 அடியாக இருந்தது. இதனால் 6 லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் பரப்பில் குறுவைச் சாகுபடி நடந்தது. ஆனால், இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குறுவை சாகுபடி இலக்கு கடந்த ஆண்டைவிட 50 சதவிகிதம் வரை குறையும் என வேளாண் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.57 லட்சம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 97 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறை மாவட்டத்தில் 87 ஆயிரம் ஏக்கர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் அளவில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ள முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 26 அன்று முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவித்திருப்பதால், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சற்று அதிகமாக பெய்தால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்படலாம் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டால், அடுத்த கட்டமாக ஆகஸ்டு மாதம் இரண்டாம் வாரத்தில் சம்பா சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.