மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12-இல் தண்ணீர் திறக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
14 May 2026, 9:56 pm

மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12-இல் தண்ணீர் திறக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 14- டெல்டா மாவட்ட பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் வருவாய்த்துறை, கூட்டுறவு, வேளாண்மை, நீர்வளத்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற முன்னோடி விவசாயிகள் பேசியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்க ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் மேட்டூர் அணையையும், கல்லணையையும் நேரில் வந்து திறந்து வைக்க வேண்டும்.

குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதியளவு இருப்பு வைக்க வேண்டும்.

அதே போல் குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் கடன் வழங்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளின் பயிர் கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,500ம் விலையை வரும் கொள்முதல் பருவத்திலிருந்து வழங்க வேண்டும்’’ இவ்வாறு பேசினர்.