தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் ரசாயனக் கழிவு

1 hour before
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் ரசாயனக் கழிவு

மேட்டூர் நீர்த்தேக்கத்தில் ரசாயனக் கழிவு

சேலம், அக்.8-மேட்டூர் அருகே சேத்துக்குளி கிராமத்தை ஒட்டியுள்ள காவிரி நீர்த்தேக்கப்பகுதியில் தண்ணீரின் தன்மை மாறியதுடன், ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி அழுகிய நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்கு கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலப் பகுதிகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீர் காவிரி வழியாக வந்து, மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தின் பண்ணவாடி, கோட்டையூர், சின்னமேட்டூர், நாகமரை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் தேங்குகிறது. இதனால் கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சுவாசிக்கக்கூட முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு, இதன் காரணமாகவேமீன்கள் உயிரிழக்கிறது.

மேலும், நீர்த்தேக்கத்தை ஒட்டியுள்ள கிணறுகளிலும் தண்ணீரின் தன்மை மாறியுள்ளதாகவும், கிணற்று நீரில்உள்ள மீன்களும் உயிரிழக்கிறது. இதனால் கால்நடைகள் மற்றும் விவசாயப் பயன்பாட்டுக்கு தண்ணீரைப்பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காவிரி ஆற்றில் குளிப்பவர்களுக்கு பல்வேறு உபாதைகள்ஏற்படுகிறது.

கர்நாடக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் காவிரியில் ரசாயனக் கழிவுகள் கலக்கிறது. இதுகுறித்துபலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கழிவுநீர் கலப்பை தடுக்கவும், நீரின் தரத்தை ஆய்வு செய்யவும்நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுமார் 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேட்டூர் நீர்த்தேக்கத்தில்உடனடியாக நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்புக்கான காரணத்தை கண்டறிந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என கரையோர மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நீர்மாசுபடுவதால் மீன்வளம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் மாசடைந்து நோய் தொற்று ஏற்படும் அபாயம்உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.