முந்தய பக்கம்

மேட்டூர் அணை திறப்பு எப்போது?

19 Aug 2026, 9:30 pm
மேட்டூர் அணை திறப்பு எப்போது?

மேட்டூர் அணை திறப்பு எப்போது?

சென்னை, ஆக. 19 -சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ரூ. 42 கோடி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார்.

10,000-க்கும் மேற்பட்ட கால்வாய்கள், 700-க்கும் மேற்பட்ட ஏரிகளை தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 150 நாள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் கிழக்கு, மேற்கு கரை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை எனவும், டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்குத் தயாராகி வரும் நிலையில் தண்ணீர் திறக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18 வரை சுமார் 14 டிஎம்சி நீர் கிடைத்துள்ளதாகவும், மேட்டூர் அணை நீர்மட்டம் 73.8 அடியிலிருந்து 82.7 அடியாக உயர்ந்துள்ளதாகவும் (மொத்த கொள்ளளவு 44.701 டிஎம்சி) தெரிவித்தார். மேலும் ஒன்பது டிஎம்சி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அணை திறப்பு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram