மேட்டூர் அணையில், தேசிய அணை பாதுகாப்பு ஆணையக்குழுவினர் ஆய்வு
7 Oct 2026, 12:17 am

மேட்டூர் அணையில், தேசிய அணை பாதுகாப்பு ஆணையக்குழுவினர் ஆய்வு

சேலம், அக்.6-மேட்டூர் அணை மற்றும் நீர்மின் நிலையங்களில் தேசிய அணை பாதுகாப்பு ஆணையக்குழுவினர் ஆய்வுமேற்கொண்டனர்.

மேட்டூர் அணை மற்றும் நீர்மின் நிலையங்களை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் தெற்கு மண்டலஇயக்குநர் கிரிதர் மற்றும் உதவி இயக்குநர் கலீல் அகமது தலைமையிலான குழுவினர் செவ்வாயன்று நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, மேட்டூர் அணையின் இடது கரை, வலது கரை, ஆய்வு சுரங்கம், கவர்னர் பாயின்ட், நீர் அளவீட்டு கருவிகள்,தானியங்கி அளவீட்டு கருவிகள், மேல் மற்றும் கீழ்மட்ட மதகு பகுதிகள், 16 கண் மதகு பகுதி,நில அதிர்வு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை குழுவினர் பார்வையிட்டனர். அங்குள்ள கருவிகளின்செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து அணையின் கட்டுமான அமைப்பு, நீர்வெளியேற்ற அமைப்புகள், அணை பாதுகாப்பு தொடர்பானஅம்சங்கள், கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவற்றில் பதிவாகும் தரவுகள் உள்ளிட்ட பல்வேறுஅம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக வெள்ள உபரிநீர் திறக்கப்படும் நேரங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின்போது சேலம் காவிரி வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர்சிவகுமார், மேட்டூர் அணை செயற்பொறியாளர் வெங்கடாஜலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் சதீஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.