தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

21 Jun 2026, 11:15 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அணைக்கு  நீர் வரத்து குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,790 கன  அடியாகக் குறைந்து உள்ளது. அணையின் நீர்  மட்டம் 79.26 அடியாக வும், நீர் இருப்பு 41.223 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக் காக அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி  நீர் வெளியேற்றப்படு கிறது.

அருவியில் குளிக்க அனுமதி தேனி:

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் கடந்த ஒரு மாதமாக நீர் இல்லாத காரணத்தால் பொது மக்கள் நுழைவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மலைப்பகுதி யில் மழை பெய்ததால் அருவியில் நீர் வரத்து தொடங்கியுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் கட்சி நடவடிக்கைகள் கூடாது! அமைச்சர் எச்சரிக்கை

சென்னை, ஜூன் 21 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளி வகுப்பறைக்குள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சிலர் கட்சித் தலைவர் விஜய்யின் புகைப்படத்துடன் ரீல்ஸ் வீடியோ எடுத்துச் சமூக வலை தளங்களில் வெளியிட்டனர். இச்சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக நிர்வாகிகள் பள்ளிகளுக்கு நோட்டுப் புத்தகம் அல்லது பேனா போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க விரும்பி னால் நேரடியாக தலைமை ஆசிரியரிடம் மட்டும் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். வகுப்பறைக்குள் நுழைவதும் மாணவர்களுக்கும் கல்விச் செயல்பாடு களுக்கும் இடையூறு செய்வதும் கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டும். கட்சிக் கொடிகள் எதுவும் பயன்படுத்தப் படக் கூடாது என அவர் உறுதியாகத் தெரிவித்தார். விதிகளை மீறிய தவெக நிர்வாகி மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் மீறி னால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுக்குப் பதிலாக பிஸ்கட் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச் சாட்டு குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதி காரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித் தார். பிஸ்கட் ஒரு துணை உணவு மட்டுமே என்றும், காலை உணவு ஏற்பாடு செய்ய இயலாவிட்டால் வேறு முறை யான உணவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார். அரசுப் பள்ளிகளில் தூய்மையான கழிப்பறைகளை அமைத்துப் பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்ப டும் என்றும், ஆண்டுக்கு ஒரு முறை பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் பேச மாட்டார்! அமைச்சர் புது விளக்கம்

சென்னை, ஜூன் 21 - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் 52 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உணவுத்துறை அமைச்சர் வெங்கட் ரமணன் பேசுகையில், முதலமைச்சர் வாய் திறக்க மாட்டார் என்றும், ஆனால் அவரின் செயலும் கையெ ழுத்தும் பேசும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி நடைபெற்றுள்ள தாகவும், தவெக வெற்றியின் மூலம் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கம் வந்துவிட்டன என்றும் அமைச்சர் வெங்கட்ரமணன் கூறினார். ஆர்டிஓ அலுவல கத்தில் ஊழல் ஒழிந்துவிட்டதாகவும், ரேசன் கார்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஜூலை மாதத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங் களில் மூட்டைக்கு ரூ.40 கொடுக்க வேண்டியிருந்த நிலை இப்போது இல்லை என்றும், தவெக அரசில் அரசியல் தலையீடு இல்லாமல் அதிகாரிகள் பணி செய்வ தாகவும் குறிப்பிட்டார்.

முதல்வர் விஜய் பிறந்த நாள் வண்டலூர் பூங்காவில் 35 ஆயிரம் பேருக்கு இலவச நுழைவு கட்டணம்

சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவில் இலவச நுழைவுச் சீட்டினை 35,000-க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதற்கான கட்டணமாக ரூ.80 லட்சத்திற்கான காசோலையை வனத்துறை அமைச்சர் ஆர்.வி. இரஞ்சித்குமாரின் குடும்ப அறக் கட்டளை சார்பாக மதியம் 12.30 மணியளவில் வண்டலூ ரில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.