முந்தய பக்கம்

மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

மேட்டுப்பாளையம், ஏப்.9- மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கவிதா, கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான கவிதா கல்யாணசுந்தரம் புதனன்று தொகுதிக்குட்பட்ட மலையடிவார கிராமங்களான தேரம்பாளையம், மொகம்பாளையம், பொம்மன்பாளையம், குரும்பபாளையம், பென்னாரி, பெரிய தொட்டிபாளையம், வெள்ளியப்பாளையம், காட்டுமேடு, கருப்பராயன் குட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கிராம மக்களிடம் நேரில் உரிய படி முதல்முறையாக திமுக சார்பில் பெண் வேட்பாளராக போட்டியிடும் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யக்கோரியதோடு அந்தந்த கிராமங்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி, ஒன்றியச் செயலாளர் கல்யாணசுந்தரம், கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கனகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram