மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்
6 Dec 2025, 2:48 pm
<p><strong>மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்</strong></p>
<p>மே.பாளையம், டிச.6- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மேட்டுப் பாளையத்திலிருந்து உதகைக்கு சிறப்பு மலை இயக்கப்படவுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலி ருந்து உதகைக்கு தினசரி நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடு களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டி கை மற்றும் புத்தாண்டை முன்னிட்டு பயணி கள் வசதிக்காக சிறப்பு மலை ரயில்கள் இயக் கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை யொட்டி மேட்டுப்பாளையம்- உதகை மற்றும் உதகை-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள் ளது. மேட்டுப்பாளையத்தி லிருந்து உதகைக்கு டிசம்பர் மாதம் 25,27,29,31 ஆகிய நான்கு நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலி ருந்து புறப்பட்டு மதியம் 2.25 மணிக்கு உதகையை சென்றடைகிறது. அதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத் திற்கு 26,28,30 ஆகிய தேதிகளிலும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் உதகையில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
