தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.85 லட்சம் செலவில் புதிய சோலார் நீரேற்று திட்டம் 1,000 ஏக்கர் நீர்ப்பாசனப் பிரச்சனைக்கு தீர்வு

8 Jul 2026, 1:24 am
ரூ.85 லட்சம் செலவில் புதிய சோலார் நீரேற்று திட்டம் 1,000 ஏக்கர் நீர்ப்பாசனப் பிரச்சனைக்கு தீர்வு
<p><strong>ரூ.85 லட்சம் செலவில் புதிய சோலார் நீரேற்று திட்டம் 1,000 ஏக்கர் நீர்ப்பாசனப் பிரச்சனைக்கு தீர்வு</strong></p><p>மேட்டுப்பாளையம், ஜூலை 7- கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் வட்டம், காரமடை அருகே உள்ள பெல்லாதி ஊராட்சி யில், பல ஆண்டுகளாக நீர்ப்பாசன வசதி இன்றி மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த விவ சாயிகளுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், ரூ.85 லட்சம் மதிப்பில் சோலார் நீரேற்று திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1,000 ஏக் கர் விவசாய நிலங்களுக்கு நீராதா ரம் கிடைக்க உள்ளதால், நூற்றுக் கணக்கான விவசாயக் குடும்பங் கள் நேரடியாக பயனடைய உள்ள னர். இந்த திட்டத்தின் கீழ், பெல் லாதி குளம் அருகே அமைந்துள்ள ஏழூ எருமை பள்ளத்திலிருந்து மொங் கம்பாளையம் அருகேயுள்ள மூங் கில் குட்டை வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. சோலார் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று மூங்கில் குட் டையை நிரப்பும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற் போது தண்ணீர் செலுத்தும் சோதனை இயக்கம் வெற்றிகர மாக நடைபெற்று வருவதால், நீண்ட காலமாக நிலவி வந்த நீர்ப்பாசனப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் காரமடை ரோட்டரி சங்கம் மற்றும் மேட்டுப்பாளையம் கல்குவாரி கிரஷர்ஸ் அசோசியே ஷன் ஆகியவற்றின் கூட்டு முயற்சி யுடன், ரோட்டரி குளோபல் ஃபண்ட் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப் பட்ட இந்தப் பணிக்காக இதுவரை ரூ.85 லட்சம் செலவிடப்பட்டுள்ள துடன், திட்டம் முழுமையாக நிறைவு பெற மொத்தம் ரூ.1 கோடி வரை செலவாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள 500 மீட்டர் குழாய் பதிக்கும் பணி உள்ளிட்ட பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் வி.பி.எம். நந்தகுமார், ஸ்ரீப்ளூ மெட்டல் ஞான சேகரன் மற்றும் கப்பல் நந்த குமார் ஆகியோர் முக்கிய பங் காற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.